ஓபிஎஸ் முதல் டிரம்ப் வரை யாரும் தப்ப முடியாது!

  Newstm Desk   | Last Modified : 13 Jun, 2018 09:03 am

tamil-padam-team-trolls-famous-g7-photo

ஜி 7 மாநாட்டின் போது உலக நாடுகளின் அதிபர்கள் டிரம்ப் முன் நிற்பது போன்று வெளியான புகைப்படத்தை கலாய்த்து தமிழ்படம்-2 படக்குழு வெளியிட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. 

சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடிப்பில் வெளியான தமிழ்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதனையடுத்து தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இந்த படத்திலும் சிவா தான் நாயகனாக நடித்து வருகிறார். 

காலம் காலமாக தமிழ் சினிமாவில் கடைப்பிடித்துவரும் சென்டிமென்ட்களை கலாய்த்தது தமிழ் படத்தின் முதல் பாகம். இந்நிலையில் இரண்டாம் பாகத்தில் சினிமா மட்டும் இன்றி அரசியலில் நடந்தவற்றையும் கையில் எடுத்துள்ளனர். 

இந்த படத்தின் அறிவிப்பு வந்த பிறகு முதல் போஸ்டரை பட நாயகன் சிவாவின் பிறந்தநாளின் போது படக்குழு வெளியிட்டது.  இந்த போஸ்டரில் மிர்ச்சி சிவா தியானம் செய்வது போன்று அமர்ந்திருந்தார். தமிழக அரசியலை புரட்டிப்போட்ட ஓபிஎஸ் செய்த தியானத்தை போன்று இருந்ததால் அப்போதே படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பு அதிகரித்தது. 

இதனையடுத்து இந்த படத்தின் டீசர் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இதில் சட்டமன்றத்தில் இருந்து சட்டை கிழிந்த நிலையில் வந்த ஸ்டாலின், அம்மா இட்லி சாப்பிட்டாங்க, விஜய் மல்லையா என அனைவரும் கலாய்க்கப்பட்டனர். 

இப்படி இந்திய அரசியலை கையில் எடுத்த இப்படக்குழு அடுத்தக்கட்டமாக உலக அரசியல் நோக்கி சென்றுள்ளது. பாரிஸ் நகரில் நடைபெற்ற ஜி7 மாநாட்டின் போது உலக தலைவர்கள் டிரம்ப் முன்பு கேள்வி கேட்பது போன்று நிற்பது, டிரம்ப் கைக்கிட்டி அமர்ந்திருப்பது போன்று புகைப்படம் ஒன்று வைரலானது. இந்த புகைப்படம் வெளியான 2 நாட்களில் தமிழ் படம் குழு ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளது.

அதில் சிவா டிரம்ப் போன்று கைக்கட்டி அமர்ந்திருக்கிறார். அவர் முன்பு படத்தின் நாயகி உட்பட படக்குழுவினர் சுற்றி நிற்கின்றனர். இதுவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close