'சூப்பர் டீலக்ஸ்' படப்பிடிப்பு முடிந்தது

  Newstm News Desk   | Last Modified : 13 Jun, 2018 10:27 am

kumararaja-s-super-deluxe-shooting-wraps

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகி வரும் சூப்பர் டீலக்ஸ் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. 

ஆரண்ய காண்டம் படத்தை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா தனது இரண்டாவது படத்தை இயக்கி வருகிறார். சூப்பர் டீலக்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி, பஹத் பாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன் மற்றும் மிஷ்கின் ஆகியோர் நடித்துள்ளனர். 

இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இயக்குநர்கள் நலன் குமாரசாமி, நீலன் மற்றும் மிஷ்கின் ஆகியோர் குமாரராஜாவுடன் இணைந்து திரைகதை எழுதி உள்ளனர். 

இப்படம் குறித்து படக்குழு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்டேட்ஸ் செய்து வந்தது.  இந்நிலையில் படப்பிடிப்பு முடிந்து விட்டதாக இன்ஸ்கிராமில் படக்குழு பதிவிட்டுள்ளது. மேலும் படப்பிடிப்பு நிறைவடைந்ததை அடுத்து அவர்கள் கேக் வெட்டி கொண்டாடும் வீடியோவும் பகிரப்பட்டு உள்ளது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close