பிரபுதேவாவின் லக்‌ஷ்மி முதல் வீடியோ பாடல் நாளை வெளியாகிறது!

  திஷா   | Last Modified : 13 Jun, 2018 02:08 pm

first-video-single-song-from-the-movie-lakshmi-releasing-tomorrow

தியா படத்தைத் தொடர்ந்து இயக்குநர் விஜய் இயக்கி வரும் படம் லக்‌ஷ்மி. அவர் இயக்கிய தேவி படத்தைத் தொடர்ந்து இதிலும் நடிகர் பிரபுதேவா தான் ஹீரோவாக நடிக்கிறார். அவருடன் ஐஸ்வர்யா ராஜேஷ், கோவை சரளா, கருணாகரன், தித்யா பாண்டே உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். ஆர்.ரவிந்திரனின் ட்ரிடென்ட் ஆர்ட்ஸும், ஸ்ருதி நல்லப்பாவின் ப்ரமோத் ஃபிலிம்ஸும் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கிறார்கள். 

நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு ஆண்டனி படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். முழுக்க முழுக்க மியூஸிகல் படமாக உருவாகும் இந்த லக்‌ஷ்மி படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைக்கிறார். 

இதில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கும் தித்யா பாண்டே, இந்தியில் ஒளிபரப்பான 'சூப்பர் டான்ஸர்' நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர். தற்போது படக்குழுவினர் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.  அதில் படத்தில் இடம் பெற்றிருக்கும் ஒரு வீடியோ பாடலை நாளை ரிலீஸ் செய்வதாக குறிப்பிடப் பட்டுள்ளது". இந்த ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் ஆகும் செய்தி பிரபுதேவா மற்றும் இயக்குநர் விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close