விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிய நடிகை!

  Newstm Desk   | Last Modified : 13 Jun, 2018 01:35 pm

malluwood-actress-megha-mathew-injured-in-car-accident

மலையாள நடிகை மேகா மேத்யூ, கார் விபத்தில் சிக்கி ஒரு மணிநேரம் உயிருக்கு போராடி இருக்கிறார்.

மலையாளத் திரையுலகத்தில் பிரபல நடிகையாக இருப்பவர் மேகா மேத்யூ. நேற்று தனது சகோதரரின் நிச்சயதார்த்தத்தில் கலந்து கொள்ளவதற்காக, கொச்சியில் இருந்து கார் மூலம் எர்ணாகுளம் சென்றார். காரை மேகா தான் ஓட்டிச் சென்றார். எர்ணாகுளம் அருகே உள்ள முளன்துருத்தி பகுதியில் சென்றபோது, எதிரே வந்த கார், மேகாவின் கார் மீது மோதியது. இதில் மேகாவின் கார் தலைகுப்புற கவிழ்ந்தது. ஆனால், விபத்தை ஏற்படுத்திய காரோ நிற்காமல் சென்றுவிட்டது. 

இந்த விபத்தில் மேகா, மயக்கமானார். ஆனால் அவர், இறந்துவிட்டதாக நினைத்து யாரும் அவருக்கு முதலுதவி செய்ய முன்வராமல்,செல்போன்களில் புகைப்படம், வீடியோ எடுத்துள்ளனர். ஒரு மணிநேரமாக காருக்குள் உயிருக்கு போராடிய மேகாவை, புகைப்படக் கலைஞர் ஒருவர் தான் மருத்துவமனையில் சேர்த்துள்ளார். சிகிச்சைக்குப் பிறகு மேகா உயிர் பிழைத்தார்.அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

நடிகை மேகா மேத்யூ, ’மாஸ்டர்பீஸ்’ என்கிற படத்தில் மம்முட்டியுடன் நடித்திருக்கிறார். இப்போது, மோகன்லாலின் அடுத்த படத்தில் நடித்து வருகிறார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close