• சென்னையில் குடிநீர் இணைப்பு பெற புதிய இணையதளம்!
  • திகார் சிறையில் கைதிகள் மீது தாக்குதல் நடத்தியதாக தமிழக காவல்துறை மீது வழக்கு
  • படித்த பெண்களை விட கிராமத்து பெண்களிடம் தைரியம் அதிகம்: கமல்ஹாசன்
  • படித்த பெண்களை விட கிராமத்து பெண்களிடம் தைரியம் அதிகம்: கமல்ஹாசன்
  • சபரிமலை தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் கிடையாது: கேரள முதல்வர் மீண்டும் திட்டவட்டம்

எங்க ஏரியா எங்கள்து - சீறும் ஜி.வி.பிரகாஷ்!

  திஷா   | Last Modified : 13 Jun, 2018 04:07 pm

kuppathu-raja-single-released

நடிப்பு, இசை என சக்கரம் போல் சுழன்றுக் கொண்டிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். தற்போது 4ஜி, ஐங்கரன், அடங்காதே, குப்பத்து ராஜா, 100% காதல், சர்வம் தாள மயம், ரெட்டைக் கொம்பு, கறுப்பர் நகரம், பெயரிடப் படாத ஆதிக் ரவிச்சந்திரனின் படம் என படு பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இதில் சர்வம் தாள மயம் படத்திற்கு ஜி.வி-யின் மாமாவும் ஆஸ்கர் நாயகனுமான ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். மற்ற பெரும்பாலான படங்களுக்கு இவர் தான் இசை. 

இதில் குப்பத்து ராஜா படத்தை இயக்குநர் பாபா பாஸ்கர் இயக்குகிறார். இதில் ஜி.வி.பிரகாஷுடன் இணைந்து பார்த்திபன், பூனம் பாஜ்வா, பலக் லால்வானி, எம்.எஸ்.பாஸ்கர், யோகி பாபு மற்றும் பலர் நடிக்கிறார்கள். எஸ் ஃபோகஸ் நிறுவனம் தயாரிக்கும் இதற்கு இசையும் ஜி.வி தான். 

இன்று தனது 31-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் ஜி.வி. அதனால் குப்பத்து ராஜா படத்தில் இடம் பெற்றிருக்கும் 'எங்க ஏரியா எங்கள்து' என்ற பாடலை வெளியிட்டு இருக்கிறார்கள் படக்குழுவினர். இதனை நடிகர் சூர்யா தனது ட்விட்டரில் இன்று ரிலீஸ் செய்தார். 

 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close