40 ஆண்டுகளுக்குப் பிறகு மாஸ்கோவில் ரிலீஸ் ஆகும் முதல் தமிழ் படம்!

  திஷா   | Last Modified : 13 Jun, 2018 12:58 pm

rajinikanth-s-kaala-is-the-first-tamil-movie-to-release-in-moscow-russia-after-40-years

காலா ஃபீவர் இன்னும் ஓய்ந்த பாடில்லை. கவுன்ட் நம்பர் 9,10 என ஃபேஸ்புக்கில் விழும் ஸ்டேட்டஸ்களை ஆங்காங்கே பார்க்க முடிகிறது. காபாலி படத்திற்கு பிறகு மீண்டும் ரஜினியும் இயக்குநர் ரஜினியும் இந்தப் படத்தில் இணைந்ததால், ஆரம்பத்திலிருந்தே இதன் எதிர்ப்பார்ப்புகள் அதிகரித்திருந்தன. நானா படேகர், ஈஸ்வரி ராவ், ஹுமா குரேஷி, சமுத்திரகனி, திலீபன், அருந்ததி, சாக்‌ஷி அகர்வால், மணிகண்டன், அஞ்சலி பாட்டில் என மிகப்பெரிய நடிப்புப் பட்டாளமே இந்தப் படத்தில் இருந்தார்கள். 

கடந்த வாரம் ரிலீஸ் ஆன இந்த காலா படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. அதோடு சவுதி அரேபியாவில் வெளியான முதல் இந்திய திரைப்படம் என்ற பெருமையையும் காலா பெற்றிருந்தது. இஸ்லாமிய நாடான சவுதியில் படம் பார்ப்பது அவர்களின் மரபுகளுக்கு எதிரானது என தியேட்டர்களை மூடியிருந்தார்கள். 

தற்போது சவுதியைத் தொடர்ந்து ரஷ்யாவிலுள்ள மாஸ்கோ நகரிலும் இந்தப் படம் வெளியாகிறது. அதோடு 40 ஆண்டுகள் கழித்து மாஸ்கோவில் வெளியாகும் முதல் தமிழ்ப்படம் என்ற பெருமையையும் இதன் மூலம் காலா பெற்றிருக்கிறது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close