மீண்டும் நஸ்ரியா...ஐ லவ் யூ சொல்லி வரவேற்ற பஹத்!

  Newstm Desk   | Last Modified : 13 Jun, 2018 01:40 pm

koode-s-aararo-song-to-be-released-today

4 ஆண்டு இடைவேளைக்கு பிறகு, திரைத்துறையில் நஸ்ரியா தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கி உள்ளார். 

2013ம் ஆண்டு நாயகியாக நடிக்கத் தொடங்கியவர் நஸ்ரியா. குழந்தை நட்சத்திரமாக மலையாள ரசிகர்களை கவர்ந்த அவருக்கு தமிழில் ஒரு படம் வெளியாகாமல் இருந்தபோதே தமிழர்கள் சிவப்பு கம்பளம் விரித்தனர். பின்னர் நிவின் பாலியுடன் இணைந்து நடித்த 'நேரம்' படம் மலையாளம் மற்றும் தமிழில் வெளியானது. படம் பெரிய வெற்றி அடையவில்லை என்றாலும் நஸ்ரியாவின் ரசிகர்கள் பட்டாளம் இன்னும் பெரிதாக அந்த படம் காரணமாக இருந்தது. 

பின் அதே ஆண்டில் 'ராஜா ராணி', 'நையாண்டி' படங்களில் நடித்தார். ராஜா ராணி படம் இன்றும் பலரது விருப்பமான படமாக உள்ளது. குறிப்பாக நஸ்ரியா வரும் காட்சிகளுக்காக படத்தை பார்த்தவர்கள் பலர். அடுத்த ஆண்டு தமிழில் 'வாயை மூடி பேசவும்', 'திருமணம் எனும் நிக்காஹ்' படங்களில் நடித்தார். 

மொத்தமாக தமிழ், மலையாளத்தில் 2 ஆண்டுகளில் 10 படங்களில் நடித்த நஸ்ரியா 10 விருதுகளை பெற்றுள்ளார். மலையாள சினிமா பக்கம் திரும்பாதவர்களை கூட 'பெங்களூரு டேஸ்', 'ஓம் சாந்தி ஓசானா' என பார்க்க வைத்தவர் நஸ்ரியா. குறைந்த காலகட்டத்தில் ரசிகர்களை கவர்ந்த அவர் 2014ம் ஆண்டு மலையான நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்து கொண்டார். 

அதன் பின் 4 ஆண்டுகள் நடிப்புக்கு பிரேக் விட்டுருந்த நஸ்ரியா தற்போது தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்குகிறார். பெங்களூரு டேஸ் படத்தை இயக்கிய அஞ்சலி மேனன் இயக்கும் 'கூடே' படத்தில் நஸ்ரியா நடித்துள்ளார். இந்த படத்தில் பிரித்வி ராஜ், பார்வதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 

இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் நேற்று முன்தினம் வெளியானது. இதனை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்த பஹத் பாசில், "முன்பு எப்போதும் இதுபோன்று பர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்து மகிழ்ச்சியடைந்ததில்லை. இது சிறந்த படம் என்பதால் மட்டும் அல்ல, இதில் நான் விரும்பும் ஒருவர் 4 ஆண்டுகளுக்கு பிறகு நடிக்கிறார். அவர் தனது பொன்னான 4 ஆண்டுகளை என் வாழ்க்கைக்காக கொடுத்துள்ளார். ஐ லவ் யூ நஸ்ரியா" என்று பதிவிட்டுள்ளார். 

இந்நிலையில் இன்று இந்த மாலை 5 மணிக்கு இப்படத்தில் இருந்து ஆராரோ பாடல் டீசர் வெளியாகிறது. நஸ்ரியாவை வரவேற்கும் வகையில் #WelcomeBackNazriya  என இந்த பாடலை படக்குழு வெளியிட உள்ளது. இப்படம் அடுத்த மாதம் திரைக்கு வர உள்ளது. 

பிறகென்ன நஸ்ரியா ஆர்மி உயிர்த்தெழட்டும்...

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close