தெலுங்கு பிக்பாஸ்-2 போட்டியாளர்கள் முழுப்பட்டியல் வெளியீடு

  Newstm Desk   | Last Modified : 13 Jun, 2018 05:19 pm

bigboss-season-2-telugu-contestents-list-released

பிக்பாஸ் சீசன் 2 தெலுங்கு நிகழ்ச்சியில் பங்குபெறும் போட்டியாளர்களின் முழுப்பட்டியலும் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது. 

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் பாகத்தை ஜூனியர் என்.டி.ஆர் தொகுத்து வழங்கினார்.  இந்த நிகழ்ச்சி டி.ஆர்.பி ரேட்டிங்கில் சக்கைப்போடு போட்டு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் இரண்டாம் பாகத்தை நடிகர் நானி தொகுத்து வழங்க இருக்கிறார். இரண்டாம் பாகத்தில் பங்கு பெற இருக்கும் பிரபலங்கள் யார் யார்? என்பதை அறிந்து கொள்வதில் தெலுங்கு ரசிகர்கள் ஆர்வம் காட்டி வந்த வேளையில், 16 பிரபலங்களை அறிவித்து இருக்கிறது நிகழ்ச்சிக்குழு. அதில் 3 பேர் மக்களுக்கு மிகவும் பரிட்சயம் இல்லாதவர்கள்.

பிரபல பின்னணி பாடகியான கீதா மாதுரி முதல் போட்டியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பக்கா லோக்கல், டார்லிங்கி உள்ளிட்ட பல பிரபலமான பாடல்களை பாடியுள்ளார். ’பட்டி’ உள்ளிட்ட ஓரிரு படங்களில் நடித்துள்ள அமித் திவாரி இரண்டாவது போட்டியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 

டிவி -9 தொலைக்காட்சி செய்திவாசிப்பாளரான தீப்தி 3 வது போட்டியாளராகவும், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கதாநாயகனாக நடித்து வரும் தனிஷ் ஒரு போட்டியாளராகவும் களம் காண உள்ளார். 

தெற்காசிய நகைச்சுவை அமைப்பின் நிறுவனரும், அனைவரும் அறிந்த நகைச்சுவையாளருமான பாபு கோஹினேனியும்,பாகுபலி படத்தில் தமன்னாவுக்கு தோழியாக நடித்த பானுஸ்ரீ மேக்ராவும் இந்தப்பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். இவர்களுடன் ராப் பாடகர் ரோல் ரிடா, தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் ஷியாமலா, நடிகர் கிரீடி தமராஜூ ஆகியோரும் களம் காண உள்ளனர்.  

ரங்கஸ்தளம் படத்தில் இடம்பெற்ற ’ரங்கம்மா மங்கம்மா’ பாடலுக்கு நடனமாடிய தீப்தி சுனைனாவுடன் பிரபல மாடலும், சின்னத்திரை நடிகையுமான கெளசல் மண்டாவும் இடம்பெற்றுள்ளனர். 

அறிமுகமற்ற தேஜஸ்வி மடிவடா 12வது போட்டியாளராக இடம்பிடித்துள்ளார். நடிகர் சம்ரட் ரெட்டி, ரேடியோ ஜாக்கி கணேஷ், மாடல் சஞ்சனா அன்னே, சமூக ஆர்வலர் நியூட்டன் நாயுடு உள்ளிட்டோரும் பங்கேற்க  உள்ளனர்.  பிக்பாஸ் முதல் பாகத்தைப்போல் இரண்டாவது பாகமும் விறுவிறுப்பாக அமையுமா என எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள் ஆந்திரவாலாக்கள்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close