சர்ச்சையில் சிக்கிய விஸ்வரூபம்-2 ட்ரெய்லர்

  ஐஸ்வர்யா   | Last Modified : 14 Jun, 2018 05:05 am
the-controversial-on-vishwaroopam-2-trailer

அண்மையில் வெளியான விஸ்வரூபம் 2 படத்தின் ட்ரெய்லரில் இஸ்லாமியர்களை இழிவுப்படுத்துவதான காட்சிகள் இடம்பெற்றுள்ளன என புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கமல்ஹாசன் இயக்கி நடித்த விஸ்வரூபம் திரைப்படத்தின் முதல் பாகத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கப்பட்டதாக கூறி இஸ்லாமிய அமைப்புகள் படத்தை வெளியிட தடை விதித்தன.  இதனால் கடுப்பான கமல், 90 கோடி ரூபாயை இந்த படத்தில் முதலீடு செய்திருப்பதாகவும், படம் வெளியாகாவிட்டால் தனது சொத்துகளை விற்றுவிட்டு இந்த நாட்டை விட்டே வெளியேறி விடுவேன் என்று கமல் பொங்கினார். அதன்பின் நீதிமன்றத்தில் இஸ்லாமியர்கள் தொடர்பான காட்சிகளை நீக்கி பின் கடந்த 2013-ம் ஆண்டு விஸ்வரூபம் வெளியானது.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வெளியான விஸ்வரூபம் 2 படத்தின் ட்ரெய்லர் மீண்டும் இஸ்லாமியர்கள் பற்றிய சர்ச்சையில் சிக்கியுள்ளது. விஸ்வரூபம் 2 படத்தின் ட்ரெய்லர் தமிழ், ஹிந்தி ஆகிய இரண்டு மொழிகளில் வெளியானது. தமிழில் வெளியான ட்ரெய்லரின் எந்த பிரச்னையும் இல்லையாம், ஹிந்தியில் தான் பிரச்னை என வரிஞ்சிக்கட்ட வந்துவிட்டனர் இஸ்லாமியர்கள் கேங்க்!

தமிழில், “எந்த மதத்தையும் சார்ந்து இருப்பது தப்பு இல்ல பிரதர், ஆனா தேசத்துரோகியா இருக்குறது தான் தப்பு” என கமல்ஹாசன் பேசக்கூடிய காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

இதே வசனங்கள் ஹிந்தி மொழியில், “ இஸ்லாமியனா இருப்பது முக்கியமில்லை... ஆனா மனுஷனா இருப்பது தான் முக்கியம்” என்ற அர்த்தத்தில் வசனங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு இஸ்லாமியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆக மொத்தத்தில் ட்ரெய்லரிலே விஸ்வரூபம் எடுத்துள்ளது விஸ்வரூபம் 2 சர்ச்சை! 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close