புது வரவு: இந்த வாரம் 4 படங்கள்

  Bala   | Last Modified : 13 Jun, 2018 08:50 pm
new-arrival-movie

புது வரவு: ரம்ஜான் பண்டிகை என்பதால் நிறைய படங்கள் ரிலீஸ் ஆகியிருக்க வேண்டும். ஆனால், கடந்த வாரத்தில் வந்த ’காலா’வின் தாக்கம் இன்னும் இருப்பதால் இந்த வாரத்தில் நான்கு படங்கள் களம் இறங்கி இருக்கிறது. அதில், எதிர்பார்ப்புக்கு உரிய படமாக ’கோலி சோடா 2’ படம் மட்டுமே உள்ளது.   

கோலி சோடா 2 : ரஃப் நோட் ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் 'கோலி சோடா 2'. புதுமுகங்கள் பரத் சீனி, வினோத், எசக்கி பரத், சுபிக்‌ஷா, கிரிஷா குரூப் ஆகியோர் நடித்துள்ள இந்தப் படத்தில் இயக்குநர் கெளதம் மேனன், சமுத்திரகனி இருவரும் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார்கள். படத்துக்கு அச்சு இசையமைத்திருக்கிறார். ஹிட்டான ’கோலி சோடா’ படத்தின் இரண்டாம் பாகம் என்பதாலும், இதில் இடம் பெறும் ’பொண்டாட்டியே..’ பாடல் பலரின் ரிங் டோனாக மாறியிருப்ப தாலும் இந்தப் படத்தின் மீது ரசிகர்களின் நம்பிக்கை அதிகரித்திருக்கிறது. 

கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா: ஹெவன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட் டாங்கய்யா’. இதில் பிரபல பாடகர் மனோவின் மகன் ரத்தீஷ் நாயகனாகவும், நடிகை இனியாவின் தங்கை தாரா நாயகியாகவும் அறிமுகமாகிறார்கள். இவர்களுடன் கே.பாக்யராஜ், ஆர்.சுந்தர்ராஜன், ஆர்.வி.உதயகுமார், மன்சூர் அலிகான், அனுமோகன், ராஜ்கபூர், 'பவர்ஸ்டார்' சீனிவாசன், அஸ்மிதா, விஷ்வா, கண்ணன், ராஜ், திவ்யா ஆகியோரும் நடித்துள்ளனர்.முழுக்க முழுக்க நகைச் சுவையை மையப்படுத்தி திரில்லர், ஆக்‌ஷன், திகில் கலந்து உருவாகியிருக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் ரசாக் இயக்கியுள்ளார். 
 

கன்னக்கோல் : ’நாடோடிகள்’பரணி நாயகனாக நடிக்கவும், புதுமுகம் காருண்யா நாயாகியாகவும் நடித்திருக்கும் படம் ’கன்னக்கோல்’. இதில் கஞ்சா கருப்பு, இளவரசு, ராஜ்கபூர், சார்லி, செவ்வாளை, சிங்கமுத்து, தீப்பெட்டி கணேசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். ராம் பிக்சர்ஸ் சார்பில் டாக்டர் வி.ராம்தாஸ் தயரித்திருக்கும் இந்தப் படத்தை வி.எ. குமரேசன் இய்க்கியிருக்கிறார். உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்தப் படம் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டிருக்கிறது.

இது தவிர, புதுமுகங்கள் நடித்திருக்கும் ’என்னோடு நீ இருந்தால்’ என்கிற படமும் திரைக்கு வருகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close