நயன்தாராவை நினைத்துருகி விக்னேஷ்சிவன் எழுதிய பாடல் இன்று வெளியீடு!

  திஷா   | Last Modified : 14 Jun, 2018 11:46 am
koko-s-next-single-releasing-today

தமிழின் முன்னணி நடிகையான நயன்தாரா, தற்போது இமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம், கோலமாவு கோகிலா, விஸ்வாசம், சைரா நரசிம்ம ரெட்டி என படு பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இதில் கோலமாவு கோகிலா படத்தை இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார். இவர் ஏற்கனவே சிம்புவை வைத்து வேட்டை மன்னன் எனும் படத்தை இயக்கியவர். 

பெண்ணை முன்னிலைப் படுத்தும் இந்தப் படத்தில் நயன்தாராவுடன் சரண்யா பொன்வண்ணன், யோகி பாபு மற்றும் பலர் நடிக்கிறார்கள். லைகா புரடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஏற்கனவே இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள இரண்டு பாடல்கள் வெளியாகியிருக்கின்றன. ஷான் ரோல்டன் மற்றும் கெளதம் மேனன் குரல்களில் 'எதுவரையோ' என்ற பாடலும், சிவகார்த்திகேயன் எழுதி அனிருத் பாடியா 'கல்யாண வயசு' பாடலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. 

இந்நிலையில் 'ஒரேயொரு' எனத் தொடங்கும் மற்றுமொரு பாடல் இன்று இரவு 7 மணிக்கு வெளியாவதாக லைகா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் அனிருத் தங்களது ட்விட்டரில் அறிவித்துள்ளனர். இந்தப் பாடலை நயனின் காதலர் விக்னேஷ் சிவன் எழுதியிருப்பது தான் இன்னும் ஸ்பெஷல்! தவிர, இந்தப் பாடலோடு 30 பாடல்களை எழுதியிருக்கிறார் விக்னேஷ்!

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
t1
Advertisement:
[X] Close