• திகார் சிறையில் கைதிகள் மீது தாக்குதல் நடத்தியதாக தமிழக காவல்துறை மீது வழக்கு
  • படித்த பெண்களை விட கிராமத்து பெண்களிடம் தைரியம் அதிகம்: கமல்ஹாசன்
  • படித்த பெண்களை விட கிராமத்து பெண்களிடம் தைரியம் அதிகம்: கமல்ஹாசன்
  • சபரிமலை தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் கிடையாது: கேரள முதல்வர் மீண்டும் திட்டவட்டம்
  • பகத் சிங் பிறந்தநாளை கொண்டாடிய மாணவி சஸ்பெஸ்ட்!

இளமையான தோற்றத்தில் ‘தல’: வைரலாகும் அஜித்தின் விஸ்வாசம் லுக்

  Newstm News Desk   | Last Modified : 14 Jun, 2018 12:27 pm

thala-s-look-in-viswasam-revealed-viral-photo

விஸ்வாசம் படத்தில் நடிகர் அஜித் இளமையான கெட்அப்பில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் விஸ்வாசம். இந்த படத்தில் நடிப்பதற்காக அஜித் உடல் எடையை குறைத்திருப்பதாக முன்னரே செய்திகள் வந்தன. இதில் இரண்டு கெட்அப்களில் அஜித் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தில் அஜித்தின்  ஒரு கெட்அப் தற்போது வெளியாகி உள்ளது. ‘தல’ செம யூத்தாக இருக்கும் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் மற்றொரு கெட்அப்பில் தர லோக்கலாக நடித்துள்ளாராம் அஜித்.

இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்தது. 30 நாட்கள் நடந்த இந்த படப்பிடிப்பை பார்க்க பல்வேறு இடங்களில் இருந்து ரசிகர்கள் அங்கு சென்றுள்ளனர். ஆனால் அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடக்க உள்ளது. வரும் 22ந்தேதி முதல் இந்த படப்பிடிப்பு நடக்கிறது. இந்த படத்தில் நயன்தாரா, தம்பி ராமையா, யோகிபாபு, ரோபோ ஷங்கர், மதுமிதா, ரமேஷ் திலக் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close