• திகார் சிறையில் கைதிகள் மீது தாக்குதல் நடத்தியதாக தமிழக காவல்துறை மீது வழக்கு
  • படித்த பெண்களை விட கிராமத்து பெண்களிடம் தைரியம் அதிகம்: கமல்ஹாசன்
  • படித்த பெண்களை விட கிராமத்து பெண்களிடம் தைரியம் அதிகம்: கமல்ஹாசன்
  • சபரிமலை தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் கிடையாது: கேரள முதல்வர் மீண்டும் திட்டவட்டம்
  • பகத் சிங் பிறந்தநாளை கொண்டாடிய மாணவி சஸ்பெஸ்ட்!

‘பிக் பாஸ் 2’வில் பிரபல கவர்ச்சி நடிகை!

  Bala   | Last Modified : 14 Jun, 2018 01:01 pm

actress-mumtaj-in-bigg-boss2

‘பிக் பாஸ் 2’ நிகழ்ச்சியில் பிரபல கவர்ச்சி நடிகை ஒருவர் போட்டியாளராக பங்கேற்பது உறுதியாகியுள்ளது.

’15 பிரபலங்கள், 60 கேமராக்கள், ஒரே வீட்டில் நூறு நாட்கள்,ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ என கமல் ஹாசன், கோலிக் குண்டு கண்களை உருட்டியபடி மிரட்டும் ’பிக் பாஸ் 2’ நிகழ்ச்சியைக் காண எல்லோரும் மிகுந்த ஆவலோடு காத்துக் கிடக்கிறார்கள். ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் விதத்தில் தயராகியிருக்கும் ’பிக் பாஸ் 2’ நிகழ்ச்சி வரும் ஜூன் 17 ஆம் தேதி கோலாகலமாகத் தொடங்க இருக்கிறது. 

இதற்கிடையே, ‘பிக் பாஸ் 2’ நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக யார் யார் பங்கேற்க போகிறார்கள்? என்கிற எதிர்பார்ப்பு, மக்களிடம் பெரும் ஆர்வத்தை தூண்டியிருக்கிறது. போட்டியாளர்கள் பற்றிய விவரத்த தொலைக்காட்சியினர்  பரம ரகசியமாக வைத்திருந்தாலும், சமூக வலைதளங்களில் அவ்வப்போது கற்பனையான பட்டியலை தயரித்து வெளியிட்டபடி இருக்கின்றனர். ஆனாலும்,சிலரது பெயர்கள் நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் கசியவும் செய்கிறது. இந்த நிகழ்ச்சியில், பவர் ஸ்டார் பங்கேற்பது உறுதியாகியுள்ளது! 

இந்நிலையில், ஒரு காலத்தில் தமிழ் சினிமா ரசிகர்களை தனது அதிரடிக் கவர்ச்சியால் கட்டிப்போட்டு வைத்திருந்த பிரபல கவர்ச்சி நடிகையாக மும்தாஜ், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.

’பிக் பாஸ்’ நிகழ்ச்சியைப் பொருத்தவரை கிளாமர் ப்ளஸ் கான்ட்ராவர்ஸி தான் முக்கிய அம்சமாக இருக்கும்! பெண்கள் கவர்ச்சியான உடை அணிந்து, யாரைப் பற்றியாவது வம்பளந்து கொண்டே டிஆர்பி ரேட்டிங்கை ஏற்றுவதற்கு தோதாக ஒரு நடிகையை தேடியபோது, அதற்குப் பொருத்தமான ஆளாக மும்தாஜ் இருந்ததால், சேனல் தரப்பிலிருந்து அவரை அணுகி உள்ளனர். சினிமா சான்ஸ் இல்லாமல் வீட்டில் முடங்கிக் கிடந்த மும்தாஜ், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க சம்மதித்திருக்கிறார். எனவே, இந்த நிகழ்ச்சியில் மும்தாஜ் பங்கேற்பது உறுதியாகி உள்ளது! ஒரு பெரிய ’கேப்’பிற்கு பிறகு சின்னத்திரை வழியாக தனது கவர்ச்சி சாம்ராஜ்ஜியத்தை தொடங்க இருக்கிறார் மும்தாஜ்.  
  

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close