கோலி சோடா 2 எப்படி இருக்கிறது?

  திஷா   | Last Modified : 14 Jun, 2018 04:48 pm

goli-soda-2-pubic-opinion

தமிழ் சினிமாவில் பல முக்கியப் படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்த விஜய் மில்டன் 'அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது என்ற படத்தின் மூலம் இயக்குநராகவும் களம் கண்டார். ஆனால் அது எதிர்ப்பார்த்த அளவு வெற்றியைத் தரவில்லை. கிட்டத்தட்ட 8 வருடம் கழித்து அவர் இயக்கத்தில் வெளிவந்த 'கோலி சோடா' படம் அவருக்கு பெரிய அளவில் பெயர் வாங்கித் தந்தது. 

4 ஆண்டுகள் கழித்து தற்போது அதன் இரண்டாம் பாகத்தை இயக்கியிருக்கிறார் மில்டன். கோலி சோடா - 2 எனப் பெயரிடப் பட்ட இதில் சமுத்திரக்கனி, ரோகிணி, கெளதம் மேனன், ரேகா, செம்பன், சுபிக்‌ஷா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். தனது ரஃப் நோட் புரடக்‌ஷன் பேனரில் தயாரித்து, எழுதி, இயக்கி, ஒளிப்பதிவு செய்திருக்கிறார் விஜய் மில்டன்.

இன்று இந்தப் படம் ரிலீஸ் ஆகியிருக்கிறது. படத்தைப் பார்த்த ரசிகர்கள் படம் நன்றாக இருப்பதாக சொல்லியிருக்கிறார்கள். குறிப்பாக முதல் பாதியும், எடிட்டிங் செய்த விதமும் அருமையாக இருப்பதாக ரசிகர்கள் பாராட்டியிருக்கிறார்கள். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close