சூர்யாவுடன் மீண்டும் இணைந்த விஜய் சேதுபதி

  Newstm Desk   | Last Modified : 16 Jun, 2018 06:09 pm
vijay-sethupathi-to-join-hands-with-surya-after-3-yrs

நானும் ரவுடி தான் படத்திற்கு பிறகு மீண்டும் தனது மகன் சூர்யாவுடன் விஜய் சேதுபதி இணைய இருக்கிறார். 

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி - நயன்தாரா ஜோடியாக நடித்து ஹிட் அடித்த படம் 'நானும் ரவுடி தான்'. மூன்று ஆண்டுகளுக்கு முன் வெளியான இப்படத்தில், விஜய் சேதுபதியின் குழந்தை கதாபாத்திரத்தில், அவருடைய மகன் சூர்யாவே நடித்திருந்தார். 

இந்த நிலையில், தனது அடுத்த படத்தில் விஜய் சேதுபதி, இயக்குநர் அருண் குமார் இயக்கத்தில் நடித்து வருகிறார். தென்காசியில் இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் ஷூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நடிகை அஞ்சலி கதாநாயகியாக நடித்து வருகிறார். 

இதற்கிடையே இப்படத்தில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யாவும் படக்குழுவுடன் இணைத்துள்ளார். அதன் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளதால், ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். படத்தில் அருள்தாஸ், விவேக் பிரசன்னா, லிங்கா, சௌந்தராஜா ஆகியோரும் நடித்து வருகின்றனர். 

விஜய் சேதுபதி ஒரு பேட்டியில், படத்தின் ஒரு கேரக்டருக்கு எனது மகன் தான் கண்டிப்பாக நடிக்க வேண்டும் என்று இயக்குநர் கேட்டுக் கொண்டார். ஆனால் சூர்யாவுக்கு நடிக்க இஷ்டமில்லை. என்றாலும், படக்குழு சமாதானம் செய்ததால் சூர்யா நடிக்க ஒப்புக்கொண்டதாக தெரிவித்தார். இப்படத்தை யுவன் ஷங்கர் ராஜா மற்றும் கே. ப்ரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close