சாலையில் குப்பையை வீசியவரை திட்டிய அனுஷ்கா சர்மா

  Newstm Desk   | Last Modified : 17 Jun, 2018 08:41 am
anushka-sharma-shouting-at-person-who-threw-garbage-in-road

காரில் சென்று கொண்டு இருக்கும் போது சாலையில் குப்பையை வீசியவரை அனுஷ்கா சர்மா கோபமாக கேள்விக் கேட்கும் வீடியோவை அவரது கணவர் விராட் கோலி வெளியிட்டுள்ளார். 

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ஆடி காரில் சென்ற ஒருவர் பிளாஸ்டிக் குப்பையை சாலையில் வீசி சென்றிருக்கிறார். அதனை  பார்த்த விராட் கோலியின் மனைவியும் பிரபல பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மா,  “ஏன் குப்பையை சாலையில் வீசுகிறீர்கள்? ஏன் பிளாஸ்டிக்கை சாலையில் வீசுகிறீர்கள்?. இதுபோன்ற செயல்களில் ஈடுபடாதீர்கள். தயவுசெய்து குப்பைகளை குப்பைத் தொட்டிகளில் போடுங்கள்” என்று கோபமாக கூறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை பகிர்ந்து விராட் கோலி, “பெரிய ஆடம்பரக் கார்களில் செல்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு இதுபோன்ற செயல்களில் பெரிய கவனமில்லை. இவர்களால் எப்படி நாடு தூய்மையடையும்?. இதுபோன்ற தவறான செயல்களை நீங்கள் பார்த்தால் அனுஷ்கா சர்மா செய்தது போல் அவர்களிடம் தூய்மையை அறிவுறுத்துங்கள். விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்” என்று பதிவிட்டுள்ளார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close