கடவுள் அருளால் வெளியான காலா படம் - ரஜினி!

  திஷா   | Last Modified : 18 Jun, 2018 04:56 pm
rajini-about-kaala-success

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த காலா படம் கடந்த 7-ம் தேதி ரிலீஸாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் ஈஸ்வரி ராவ், சமுத்திரக்கனி, ஹுமா குரேஷி, அஞ்சலி பாட்டீல், திலீபன், அருந்ததி, மணிகண்டன் உட்பட பலர் ரஜினியுடன் நடித்திருந்தார்கள். பல்வேறு எதிர்ப்புகளைத் தாண்டி வெளியான இந்தப் படம் மூன்றே நாட்களில் உலக அளவில் ரூ. 100 கோடி வசூல் செய்ததாக தயாரிப்பாளர் தரப்பில் சொல்லப் படுகிறது. 

காலா படம் ரிலீஸ் ஆகும் போது, கார்த்திக் சுப்பராஜின் படத்தில் நடிக்க டார்ஜிலிங் பறந்து விட்டார், ரஜினி. 30 நாட்கள் அங்கு நடக்கும் படப்பிடிப்பில் ரஜினி சம்பந்தப் பட்ட காட்சிகளைப் படமாக்கி வருகிறார்கள் படக்குழுவினர். படப்பிடிப்பு இடைவேளையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த ரஜினி, "கடவுள் அருளால் காலா படம் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் நல்ல முறையில் ஓடிக் கொண்டிருக்கிறது. கர்நாடக அரசின் ஒத்துழைப்போடு வெளியாகி அங்கும் பெரிய வெற்றியடைந்துள்ளது, கடவுளுக்கு நன்றி. 

நான் இன்னும் 30 நாட்கள் இங்கு தான் இருப்பேன். பலரும் காணாத பல அழகான இடங்கள் இங்கே உள்ளன. இந்த படம் மூலம் அந்த இடங்களை மொத்த நாடும் தெரிந்து கொள்ளும் என நம்புகிறேன்" என்றார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close