மெர்சல் அரசனைத் தொடர்ந்து மீண்டும் ஏ.ஆர். இசையில் பாடிய ஜி.வி!

  திஷா   | Last Modified : 19 Jun, 2018 12:50 pm
mersal-arsan-combo-is-back

இசையமைப்பாளர் நடிகராவதும், நடிகர் இசையமைப்பதும் சினிமாவில் சாதாரணமான ஒன்று. அப்படி இசையமைப்பாளராக இருந்து ஹீரோவானவர் தான் ஜி.வி.பிரகாஷ். தற்போது 4ஜி, ஐங்கரன், அடங்காதே, குப்பத்து ராஜா, 100% காதல், சர்வம் தாள மயம் ஆகியப் படங்களில் நடித்து வருகிறார். இதில் சர்வம் தாள மயம் படத்தை இயக்குநர் ராஜிவ் மேனன் இயக்குகிறார். படத்திற்கு இசை ராஜிவின் நண்பரும், ஜி.வி-யின் மாமாவுமான ஏ.ஆர்.ரஹ்மான். 

ஜெண்டில்மேன் படத்தில் ரஹ்மான் இசையில் 'சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலு' பாடலின் மூலம் தனது குரலை சினிமாவில் பதிவு செய்தார் ஜி.வி. சிறுவனாக பல படங்களில் அவருடன் வேலை செய்த ஜி.வி, கடந்த வருடம் வெளியான மெர்சல் படத்தில் இடம்பெற்ற 'மெர்சல் அரசன் வாரான்' என்ற பாடலையும் பாடியிருந்தார். அந்தப் பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. 

இந்நிலையில் சர்வம் தாள மயம் படத்தில் வரும் ஓபனிங் பாடலையும் ஜி.வி-யையே பாட வைத்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். இதில் நான் பாடியிருக்கும் 'பீட்டர் பேட்டா ஏது' என்ற பாடல் ரஹ்மானின் எவர்கிரீன் பாடலான ஊர்வசி பாடலைப் போல் இருக்கும் என ஜி.வி.பிரகாஷ் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.  

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close