காலாவை விட சிறந்த படம் மெர்சல்: விஜயின் தந்தை விமர்சனம்

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 20 Jun, 2018 07:17 am
mersal-is-better-than-kaala-review-of-vijay-s-father

அரசியல் படங்களில் காலாவை விட மெர்சல்தான் சிறந்த படம் என நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
எஸ்.ஏ.சந்திரசேஅரசியல் படங்களில் காலாவை விட மெர்சல்தான் சிறந்த படம் என நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.கர் தயாரித்து நடித்திருக்கும் டிராபிக் ராமசாமி திரைப்படம் வரும் 22ம் தேதி ரிலீசாக இருக்கிறது. இதுதொடர்பாக பேசிய அவர், ’சமூகத்திற்காக போராடி வரும் டிராபிக் ராமசாமி கோமாளி போல சித்தரிக்கப்படுகிறார். அந்த கருத்தை மாற்றுவதற்காகவே இந்த படத்தை தயாரித்திருக்கிறோம். சமகாலத்தில் சமூக கருத்துக்கள் கொண்ட பல திரைப்படங்கள் வெளிவருவது நல்ல தொடக்கம்தான். நேரடியாக அரசியல் பேசும் காலா போன்ற படங்களை விட, கமர்சியல் கலந்த ஜனரஞ்சகமான மெர்சல் போன்ற படங்களில் பேசப்படும் அரசியலைத்தான் மக்கள் விரும்பி ரசிக்கிறார்கள். ஆக, காலாவைவிட மெர்சல் சிறந்த படம்’’ என்று அவர் தெரிவித்தார்.
மேலும், தன்னைவிட விஜய்க்கு நிறைய அரசியல் தெரியும். தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை விஜய் நேரில் சென்று பார்த்ததற்கு அவரின் மனிதநேயமே காரணம். விஜய் மக்கள் மன்றத்தைச் சேர்ந்தவர்கள் அவர்களின் தெருவையும், ஊரையும் சுத்தம் செய்வதே அவரின் முதற்கட்ட அரசியல் நடவடிக்கை என எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close