ஷாங்காயில் பேரன்பு: இயக்குநர் ராம் நெகிழ்ச்சி

  Bala   | Last Modified : 20 Jun, 2018 02:29 pm
peranbu-receive-laurels-and-win-hearts-worldwide

இயக்குநர் ராமின் ’பேரன்பு’ திரைப்படம், ஷாங்காய் சர்வதேசத் திரைப்பட விழாவுக்குத் தேர்வாகியிருக்கிறது.  

'தரமணி' படத்தை தொடர்ந்து, இயக்குநர் ராம் அடுத்ததாக `பேரன்பு' படத்தை இயக்கி உள்ளார். இதில் கேரளா சூப்பர் ஸ்டார் மம்முட்டி நாயகனாக நடித்திருக்கிறார். மேலும் சரத்குமார், அஞ்சலி, சமுத்திரக்கனி, வடிவுக்கரசி, ’தங்க மீன்கள்’ சாதனா, லிவிங்ஸ்டன், சுராஜ், சித்திக், அருள்தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரம் ஏற்றுள்ளனர். இந்தப்  படம் தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் உருவாகி உள்ளது. பி.எல்.தேனப்பன் தயாரித்துள்ள இந்தப் படம் சமீபத்தில், நெதர்லாந்தில் நடைபெற்ற நாட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடுவதற்கு தேர்வானது. அங்கு திரையிடப்பட்ட ‘பேரன்பு’ படத்துக்கு மிகச் சிறந்த வரவேற்பு இருந்தது. 

இந்நிலையில், ’பேரன்பு’ திரைப்படம் ஆசியாவின் ஆஸ்கார் என புகழப்படும் சீன தேசத்து ஷாங்காய் திரைப்பட விழாவுக்குத் தேர்வாகியிருக்கிறது. கடந்த 21 ஆண்டுகளாக நடந்து வரும் இந்த திரைப்பட விழாவில் இந்த ஆண்டு இந்தியாவிலிருந்து 6 படங்கள் அனுப்பப்பட்டது. அதில் ’பேரன்பு’ படம் மட்டுமே தேர்வாகியுள்ளது. 

நெதர்லாந்தின் நாட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் ’பேரன்பு’ படத்தைப் பார்த்த பார்வையாளர்கள் கை தட்டி பரவசமடைந்ததைப் போலவே, ஷாங்காய் திரைப்பட விழாவிலும் பார்வையாளர்கள் ‘பேரன்பு’ படத்தை கொண்டாடினர். ஷாங்காய் மக்கள் காட்டிய இந்தப் ‘பேரன்பு’ நெஞ்சை நெகிழ வைக்கும் விதத்தில் இருந்ததாக கூறியுள்ளார் இயக்குநர் ராம்.  

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close