மீண்டும் படம் இயக்கும் பீட்சா தயாரிப்பாளர்

  Bala   | Last Modified : 20 Jun, 2018 12:19 pm
cv-kumar-is-directing-the-film-again

பீட்சா படத்தின் தயாரிப்பாளரான சி.வி.குமார், ’மாயவன்’ படத்தை அடுத்து மீண்டும் படம் இயக்கத் தயாராகிவிட்டார்.

திருக்குமரன் எண்டெர்டெய்ன்மெண்ட் பட நிறுவனத்தின் சார்பில் ’அட்டக்கத்தி’, ’சூது கவ்வும்’, ’பீட்சா’, ’முண்டாசுப்பட்டி’, ’இறுதி சுற்று’, ’மாயவன்’ போன்ற படங்களை தயாரித்தவர் சி.வி.குமார். வெற்றிகரமான தயாரிப்பாளராக வலம் வரும் இவருக்கு படம் இயக்கும் ஆசை வரவே, ’மாயவன்’ என்கிற படத்தை தயாரித்து, இயக்கினார். கடந்த ஆண்டு வெளிவந்த அந்தப் படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை.

இந்நிலையில், தயாரிப்பாளர் சி.வி.குமார், மீண்டும் படம் இயக்கத் தயாராகிவிட்டார். ’கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்’ என படத்துக்கு டைட்டில் வைத்திருக்கிறார். இந்தப் படத்திற்கு  கார்த்திக் குமார் ஒளிப்பதிவு செய்ய, ஹரி டபுசியா இசையமைக்க, எழுதி இயக்குகிறார் சி.வி.குமார். இதில் நடிக்கப்போகும் நட்சத்திரங்கள் யார் யார்? என்பது இன்னும் முடிவாக வில்லை! இந்நிலையில், நேற்று பாடல் பதிவுடன் இந்தப் படத்தின் வேலைகள் தொடங்கியது.  
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
t1
Advertisement:
[X] Close