'தமிழ்படம் 2.0'வை பார்த்து தலையில் கைவைத்த தயாரிப்பாளர்; வைரல் ஆகும் போட்டோ!

  Newstm Desk   | Last Modified : 20 Jun, 2018 02:41 pm
tamizh-padam-2-0-producer-reaction-after-watching

மற்றவர்களின் படங்களை கலாய்த்து படம் எடுத்து ஜெயித்த தயாரிப்பாளர் சசிகாந்த்தையே, அவரின் 'தமிழ்படம் 2.0' திரைப்படம் கவலையில் தள்ளிவிட்டது போன்ற போட்டோவை இயக்குநர் அமுதன் வெளியிட்டுள்ளார். பட பிரமோஷனில் இது என்ன புது டிரிக்‌ஸாக இருக்கிறது என்று நெட்டிசன்கள் வைரல் ஆக்கி வருகின்றர். 

சூப்பர் ஹிட் அடித்த சில தமிழ் படங்களை கால்ய்த்து உருவான படம், `தமிழ் படம்'. சிவா நடிப்பில், சி.எஸ்.அமுதன் இயக்கத்தில், ’ஒய் நாட்ஸ்டுடியோ’ பட நிறுவனத்தின் சார்பில் சசிகாந்த தயாரிப்பில் வந்த இந்தப் படத்தில் கதை என்பது கடுகளவுக்கு கூட இல்லை! தமிழ் சினிமாவில் காலங்காலமாக கடைபிடிக்கப்படும் திரைக்கதைப் போக்கை ’கிண்டல்’ செய்தே முழுப் படத்தையும் ஒப்பேற்றியிருந்தனர். ஆனால், அந்த கிண்டலையும், கலாய்ப்பையும் ரசிகர்கள் ரசித்ததால் படம் ஹிட் ஆனது. இதையடுத்து, அதே டீம் தற்போது இதன் இரண்டாவது பாகத்தை 'தமிழ்படம் 2.0' என்ற பெயரில் உருவாகி இருக்கிறது. இந்த முறை, அரசியல் வாதிகளையும் விட்டு வைக்கவில்லை!

இதன் டீசர் சமீபத்தில் வெளியானது. இதில் விஜய், அஜித், விக்ரம், தனுஷ், விக்ரம் மற்றும் உள்ளூர் அரசியல் தலைவர்கள்முதல் உலக அரசியல் தலைவர்கள் வரை காலாய்த்திருந்தனர். இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில், ’தமிழ் படம் 2.0’வின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் விறு விறுப்பாக நடந்தது வந்தது. படம் தயாரானதும் தயாரிப்பாளர் சசிகாந்த் படம் முழுவதையும் பார்த்திருக்கிறார். படம் பார்த்த அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது. கவலையோடுவெளியே வந்து தலையில் கையை வைத்தபடி  உட்கார்ந்துள்ளார்.

மற்றவர்களின் படங்களை கலாய்த்து படம் எடுத்து ஜெயித்த தயாரிப்பாளர் சசிகாந்த்தை, அவரின் 'தமிழ்படம் 2.0' திரைப்படம், இப்போது கவலையில் தள்ளியிருக்கிறது. அவர், கவலையுடன் இருக்கும் தலையில் புகைப்படத்தை வெளியிட்ட இயக்குநர் சி.எஸ்.அமுதன், ‘தமிழ்ப்படம் 2.O படம் பார்த்த தயாரிப்பாளரின் மனநிலை’ என்றும் பதிவு செய்திருக்கிறார். இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக மாறியுள்ளது. இது எந்த படத்தின் கலாய்ப்பு என்று தெரியவில்லை. ஜிகர்தண்டா படத்தில் இதுதான் நான் கேட்ட ரத்தம் தெறிக்க வைக்கும் கேங்ஸ்டர் படமா என்று கேட்டு தயாரிப்பாளர் தலையில் கை வைப்பது போன்ற சீன் வரும். அதை கிண்டல் செய்திருக்கிறார்களோ என்று நெட்டிசன்கள் கொண்டாடி வருகின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close