விஜய் 62 படத்தின் டைட்டில் வேற லெவல்?

  Newstm Desk   | Last Modified : 21 Jun, 2018 09:42 am
is-vijay-62-titile-is-veralevel

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படத்திற்கு 'வேற லெவல்' என தலைப்பு வைக்கப்பட்டு இருப்பதாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

மெர்சல் படத்திற்கு பிறகு விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்துவருகிறார். இது விஜய்யின் 62வது படம் என்பதால் தளபதி62 என குறிப்பிடப்பட்டு வருகிறது. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்தில் விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். 

இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு அமெரிக்காவில் நடைபெற உள்ளது.

விஜய் பிறந்தநாளை முன்னிட்டு நாளை மாலை 6 மணிக்கு இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்படும் என்று முன்னரே தயாரிப்பு நிறுவனம் அறிவித்து இருந்தது. 

இந்நிலையில் இந்த படத்திற்கு 'வேற லெவல்' என்று தலைப்பு வைத்திருப்பதாக சமூகவலைதளங்களில் ஒரு தகவல் பரப்பப்பட்டு வருகிறது. மேலும் இதற்கு ஆதாரமாக ஒரு புகைப்படத்தையும் பகிர்ந்து வருகின்றனர். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Loading...
Advertisement:
[X] Close