புது வரவு : இந்த வாரம் 5 படங்கள்

  பால பாரதி   | Last Modified : 21 Jun, 2018 03:17 pm
new-movie-arrivals

இந்த வாரத்தில் ஜெயம் ரவியின் ’டிக் டிக் டிக்’, ’டிராஃபிக் ராமசாமி’, ’ஆந்திரா மெஸ்’, ’கார்கில்’, ’என்ன தவம் செய்தேனோ’ என மொத்தம் 5 படங்கள் களத்தில் இறங்குகின்றன.

டிக் டிக் டிக் : தமிழ் சினிமா வரலாற்றில் முழுக்க முழுக்க விண்வெளியைக் கதைக் களமாகக் கொண்டு உருவாகியுள்ள படம் ’டிக் டிக் டிக்’. சக்தி சௌந்தர் ராஜன் இயக்கியுள்ள இப்படத்தில் ஜெயம் ரவி ஹீரோவாக நடித்திருக்கிறார். நிவேதா பெத்துராஜ் நாயகியாக வலம் வருகிறார். ஜெயம் ரவியின் மகன் ஆரவ் முக்கிய ரோலில் நடித்துள்ளார். மேலும் ஜெயபிரகாஷ், வின்சென்ட் அசோகன், ரமேஷ் திலக், ரித்திகா ஆகியோர் முக்கிய காதாப்பாத்திரம் ஏற்றுள்ளனர். இது இசையமைப்பாளர் இமானுக்கு 100-வது படமாகும். இப்படத்தை நேமிசந்த் ஜபக் சார்பில் வி.ஹித்தேஷ் ஜபக் தயாரித்திருக்கிறார். 

டிராஃபிக் ராமசாமி: சமூகப் போராளி டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து 'டிராஃபிக் ராமசாமி' என்கிற பெயரிலேயே தயராகி யிருக்கும் படத்தில் நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக ரோகிணி நடித்துள்ளார். விஜய் ஆண்டனி, சீமான், குஷ்பூ ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கின்ரனர். அறிமுக இயக்குநர் விக்கி இயக்கியிருக்கும் இந்தப் படத்துக்கு பாலமுரளி பாலு இசையமைத்திருக்கிறார். 

ஆந்திரா மெஸ்:  ஷோ போட் ஸ்டுடியோஸ், நிர்மல் கே பாலா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஜெய் இயக்கியிருக்கும் படம் 'ஆந்திரா மெஸ்'. இதில் ராஜ் பரத், தேஜஸ்வினி, ஏ.பி.ஸ்ரீதர், பூஜா தேவரியா ஆகியோர் நடித்துள்ளனர். ‘அங்கமாலி டைரீஸ்’, ‘சகாவு’ போன்ற படங்களுக்கு இசையமைத்த பிரசாந்த் பிள்ளை இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். முகேஷ்.ஜி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். நான்கு திருடர்கள், ஒரு முன்னாள் ஜமீன்தார், அவருடைய இளம் மனைவி... இவர்களின் வாழ்வில் அடுத்தடுத்து நடக்கிற சம்பவங்களின் தொகுப்பை மாறுபட்ட கோணத்தில் சொல்கிறது ’ஆந்திரா மெஸ்’ திரைப்படம்!  

கார்கில்: தமிழ் சினிமாவில் அவ்வப்போது புது முயற்சிகளில் சிலர் இறங்குவதுண்டு! அப்படிப்பட்ட ஒரு முயற்சியில் உருவாகியுள்ள படம் ‘கார்கில்’. ஜிஷ்ணு என்பவர் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில்  ஒரே ஒருவர் மட்டும்தான் நடித்துள்ளார். சென்னையிலிருந்து காரில் பெங்களுர் செல்லும் நாயகனுக்கும் அவன் காதலிக்கும் ஏற்படும் மன போராட்டத்தை சொல்லும் இந்தப் படத்தை சுபா செந்தில் தயாரித்து இயக்கியிருக்கிறார்.  விக்னேஷ் இசையமைக்க, கணேஷ் பரமஹம்ஸா ஒளிப்பதிவு செய்துள்ளார். 


. 

என்னதவம் செய்தேனோ:  இணைந்த கைகள் கலைக்கூடம் நிறுவனத்தின் சார்பில் எஸ்.செந்தில் குமார் தயாரிக்க, இயகுநர் பேரரசு உதவியாளர் முரபாசெலன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘என்னதவம் செய்தேனோ’. 

அரசியல் பெரும்புள்ளியின் மகளை, ஐஸ் வண்டிக்காரன் காதலிப்பதால் ஏற்படும் பிரச்னைகளை பற்றி படம் பேசும் இந்தப் படத்தில் நாயகனாக கஜினிமுருகன், நாயகியாக விஷ்ணு பிரியா நடித்டிருக்கிறார்கள். மேலும் ப்ரியாமேனன், பவர்ஸ்டார் சீனிவாசன், சிங்கம்புலி, மயில்சாமி, டெல்லிகணேஷ், ஆர்த்தி கணேஷ், பான்பராக் ரவி, ஆர்.என்.ஆர்.மனோகரன் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close