கமல்ஹாசனை மிரட்டிய வில்லன் நடிகர்!  

  பால பாரதி   | Last Modified : 22 Jun, 2018 06:51 am

stun-master-siva-basks-in-glory

கமல்ஹாசனை  மிரட்டிய வில்லன் நடிகருக்கு பாரட்டுக்கள் குவிகின்றன.

தமிழில் கமல், விஜய், விக்ரம், இந்தியில் சல்மான்கான், அக்‌ஷய்குமார் போன்ற ஹீரோக்களின் படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றியுள்ள ’ஸ்டண்ட்’ சிவா தற்போது வில்லன் அவதாரம் எடுத்துள்ளார். வெளிவந்து ஓடிக் கொண்டிருக்கும் ‘கோலி சோடா 2’ படத்தில் வில்லனாக வந்து மிரட்டியிருக்கும் ’ஸ்டண்ட்’ சிவாவுக்கு
பாராட்டுக்கள் குவிகின்றன. 

இது குறித்து ’ஸ்டண்ட்’ சிவா கூறுகையில், “சினிமாவில் 15 ஆண்டுகளாக ஸ்டண்ட் மாஸ்டராக இருக்கிறேன்.  நடிக்கும் ஆசையில் தான் சினிமாவுக்கு வந்தேன், ஆனால், ஸ்டண்ட் மேன் வாய்ப்பு தான் கிடைத்தது. பிறகு, ’வேட்டையாடு விளையாடு’ படத்தில் நடித்தேன். "என்ன மணி.., என்னோட கண்ணு வேணும்னு கேட்டியாமே.." என கமல் சார்  கேட்கும்போது, "வேணாம் ராகவா..,!’ என அவரை மிரட்டுவேன். அதுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த எனக்கு இயக்குநர் விஜய்மில்டன் ’கோலி சோடா2’ படத்தில் சீமைராஜா என்ற ஜாதி சங்க தலைவர் கதாபாத்திரத்தை கொடுத்தார். அதில் நடித்த பிறகு எனக்கு பாராட்டுக்கள் குவிகின்றன. இப்போது நிறையப் படங்களில் வாய்ப்பு வந்திருக்கிறது" என்றார். 
 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close