3 இடியட்ஸ் படத்தின் 2ம் பாகம் தயாராகிறது

  Newstm Desk   | Last Modified : 22 Jun, 2018 10:25 pm
rajkumar-hirani-scripting-for-3-idiots-part-2

பாலிவுட்டில் வெளியாகி சூப்பர் ஹிட்டான 3 இடியட்ஸ் படத்தின் 2ம் பாகம் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

2009ம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான படம் 3 இடியட்ஸ். இந்த படத்தை ராஜ்குமார் ஹிரானி இயக்கி இருந்தார். ஆங்கிலந்தில் வெளியான சேத்தன் பகத்தின் 3 இடியட்ஸ் நாவலை தழுவி இந்த படம் எடுக்கப்பட்டது. இந்திய கல்விமுறை பற்றி பேசிய இந்த படம் பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டானது. 

அமிர் கான், மாதவன், ஷர்மான் ஜோஷி, கரீனா கபூர் ஆகியோர் இந்தபடத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழிலும் 'நண்பன்' என்ற பெயரில் இப்படம் ரீமேக் செய்யப்பட்டது. சங்கர் இயக்கிய இந்த படத்தில் விஜய், ஶ்ரீகாந்த், ஜீவா ஆகியோர் நடித்திருந்தனர். தமிழிலும் இந்த படம் பாக்‌ஸ் ஆபிசில் ஹிட்டானது. 

இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது சஞ்சு படத்தில் பிசியாக இருக்கும் ராஜ்குமார் ஹிரானி இதுகுறித்து கூறும் போது, "நீச்சயமாக 3 இடியட்ஸ் படத்தின் 2ம் பாகத்தை உருவாக்கும் எண்ணம் உள்ளது. சில நாட்களுக்கு முன் தான் இதற்கான திரைகதையை எழுத தொடங்கினேன்" என்றார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close