மில்லியனைத் தொட்ட ’பியார் ப்ரேமா காதல்’ பட ’டோப்’ பாடல்!

  பால பாரதி   | Last Modified : 23 Jun, 2018 01:40 pm
pyaar-prema-kadhal-movie-dope-song-record

பிக் பாஸ்’ பிரபலங்கள் ஹரிஷ் - ரைசா ஜோடி சேர்ந்திருக்கும் ’பியார் பிரேமா காதல்’ படத்தில் இடம்பெற்றுள்ள ’டோப்’ பாடல், மில்லியன் பார்வையாளர்களைத் தொட்டிருக்கிறது. 

’பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் வாயிலாக பிரபலமான ஹரிஷ் மற்றும் ரைசா இருவரும் ‘பியார் பிரேமா காதல்’ என்கிற படத்தில் ஜோடியாக நடித்து வருகின்றனர். இந்தப் படத்தை ஒய் எஸ் ஆர் ஃபிலிம்ஸ் சார்பில் யுவன் சங்கர் ராஜா தயாரிக்கிறார். இந்தப் படத்தை இளன் என்பவர் இயக்குகிறார். 

’பிக் பாஸ்’ பிரபலங்கள் ஜோடி சேர்ந்திருப்பதால் இந்தப் படத்துக்கு ரசிகர்கள் வட்டாரத்தில் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் மயக்கும் இசையில் உருவாகியிருக்கும் ’High on Love' என்ற பாடல் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு இருந்தது. இதையடுத்து சமீபத்தில், 'டோப்' என்ற இரண்டாவது சிங்கிள் வெளியானது. மிக குறுகிய காலத்திற்குள்ளாகவே இந்த பாடல் ட்ரெண்டிங்கில் டாப் இடத்திற்கு சென்றதுடன், மில்லியன் பார்வைகளை மிக வேகமாக கடந்திருக்கிறது. மோகன் ராஜனின் பாடல் வரிகளும், யுவனின் மயக்கும் இசையும் ரசிகர்களுக்கு காதல் பரவசத்தை கொடுத்திருக்கிறது. 

’இந்த இரண்டு பாடல்களிலேயே ’பியார் பிரேமா காதல்’ படத்துக்கு ஈர்ப்பு அதிகமாகியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. குறிப்பாக, 'டோப்' பாடல் இசை, ரசிகர்களின் நரம்புகளுக்குள் புது எனர்ஜியை பாய்ச்சியுள்ளது" என்கிறார் இயக்குனர் இளன்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
t1
Advertisement:
[X] Close