ஏறுமுகத்தில் ’இருட்டு அறையில் முரட்டு குத்து’ இசையமைப்பாளர்!

  Bala   | Last Modified : 24 Jun, 2018 10:23 pm

music-director-balamurali-balu-in-busy-sheduled

’ஹரஹர மகாதேவகி’,’இருட்டு அறையில் முரட்டு குத்து’ போன்ற அடல்ட் காமெடிப் படங்களுக்கு இசையமைத்திருக்கும் பாலமுரளி பாலுவுக்கு பட வாய்ப்புகள் குவிகின்றன.

’பிச்சாங்கை’ என்கிற திரைப் படம் மூலம் சினிமாவுக்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் பாலமுரளி பாலு. இந்தப் படத்தில் அவரை யாரும் அடையாளம் கண்டுகொள்ளவில்லை! ஆனால்,  ’ஹர ஹர மஹாதேவகி’ மற்றும், ’இருட்டு அறையில் முரட்டு குத்து’ ஆகிய அடல்ட் காமெடிப் படங்கள் பால முரளி பாலுவை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.

அடல்ட் காமெடி வகையை சேர்ந்த இந்தப் படங்களுக்கு பின்னணி இசையில் பின்னியிருந்த பாலமுரளி பாலுவின் இசைக்கு, இளைஞர்கள் மத்தியில் அபாரமான ஆதரவு கிடைத்தது. இதனால், பால முரளி பாலுவுக்கு பட வாய்ப்புகள் குவிகின்றன.

எஸ்.ஏ.சந்திரசேகர் கதையின் நாயகனாக நடித்து தற்போது வந்திருக்கும் ‘டிராபிக் ராமசாமி’ படத்திற்கும் இசையமைத்திருக்கிறார் பாலமுரளி பாலு. மேலும், கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிப்பில், ஆர்யா நடிக்கும் ‘கஜினிகாந்த்’ ’பல்லு படாமப் பாத்துக்கணும்’, ’தட்றோம் தூக்குறோம்’ ஆகிய படங்கள் பாலமுரளி பாலு கை வசத்தில் உள்ளன.


 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close