தயாரிப்பாளர்கள் கஷ்டம் இப்போது தான் புரிகிறது - அதர்வா

  பால பாரதி   | Last Modified : 24 Jun, 2018 09:21 am
atharvaa-talks-about-semma-botha-aagatha-movie

’சொந்தப் படம் எடுத்த பிறகுதான் தயாரிபாளர்களின் கஷ்டம் புரிகிறது’  என்றார் நடிகர் அதர்வா

வளர்ந்து வரும் இளம்நாயகனாக அதர்வா, இப்போது தயாரிப்பாளராக மாறி ‘செம போத ஆகாதே’ படத்தை எடுத்திருக்கிறார். அதர்வா ஹீரோவாக நடித்திருக்கும் இந்தப் படத்தில் மிஸ்டி மற்றும் அனிகா சோடி இருவரும் நாயகிகளாக நடித்திருக்கிரார்கள். மேலும் மனோபாலா, கருணாகரன், யோகிபாபு, ஜான்விஜய், கும்கி அஸ்வின் ஆகியோரும் நடித்துள்ளனர். படத்தை பத்ரி வெங்கடேஷ் இயக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.  அடுத்த வாரத்தில் திரைக்கு வரும் நிலையில், ’செம போத ஆகாதே’ படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது அதர்வா கூறுகையில், 

“படவிழாக்களில் பல தயாரிப்பாளர்கள் தங்கள் கஷ்டங்களை சொல்வதை கேட்டு இருக்கிறேன். அப்போதெல்லாம், ஏன் இப்படி புலம்புகிறார்கள்? என்று நான் நினைப்பேன். ஆனால், ஒரு படத்தை எடுத்து அதை திரைக்கு கொண்டு வருவது எவ்வளவு கஷ்டம் என்பதை இப்போது அனுபவ பூர்வமாக உணர்கிறேன்.சொந்தப் படம் எடுத்த பிறகுதான் தயாரிபாளர்களின் கஷ்டம் புரிகிறது!  

நான் அறிமுகமான ’பாணா காத்தாடி’ படத்தை இயக்கிய இயக்குநர் பத்ரி வெங்கடேஷ், ஒரு  ஜாலியான படமாக இதை எடுத்துள்ளார். ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும். சீரியஸ் படங்களில் நடித்த நான் பொழுதுபோக்கு அம்சம் உள்ள படத்தில் நடித்துள்ளேன். இந்த படம், மதுபழக்கத்தை ஊக்குவிக்கவில்லை. போதையில் ஒருவன் முட்டாள் தனமான வேலை செய்கிறான். அதனால் வரும் பிரச்சினைகள் என்ன என்பதே கதை.” என்றார். 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close