டிக்டிக்டிக் படத்தை கலாய்க்கும் தமிழ் படம் 2 போஸ்டர்

  Newstm News Desk   | Last Modified : 24 Jun, 2018 06:47 pm

tamil-padam-2-team-trolls-tik-tik-tik-movie

இரு தினங்களுக்கு முன்பு வெளியான டிக்டிக்டிக் படத்தை கலாய்க்கும் விதத்தில் தமிழ்படம் 2 படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது.

சி.எஸ். அமுதன் இயக்கத்தில் தமிழ்படம் 2ம் பாகம் உருவாகி வருகிறது. அப்படக்குழு வெளியிடும் ஒவ்வொரு தகவலாளும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இப்படத்தின் முதல் போஸ்டரான 'தர்ம யுத்தம்' முதல் சாமி படத்தின் டிரைலர் வெளியான அடுத்த நாளே வெளியான 'போலீஸ் கமிஷனர்' ஏழுச்சாமி போஸ்டர் வரை அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் இப்படத்தின் டீசர் மற்றும் ஒரு பாடலும் வெளியாக இணையத்தை கலக்கின. சில தினங்களுக்கு முன்பு ஜி7 மாநட்டின் முக்கிய புகைப்படம் ஒன்றை போலவே போஸ்டரை வெளியிட்டு இருந்தது இப்படக்குழு. இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு வெளியான டிக்டிக்டிக் படத்தை கலாய்க்கும் விதமாக புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

இந்தியாவின் முதல் விண்வெளி படமான டிக்டிக்டிக் படத்தில் ஜெயம்ரவி, நிவேதா பெத்துராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் 2 தினங்களுக்கு முன்பு வெளியாக கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. தற்போது தமிழ் படம் 2  படக்குழு வெளியிட்டுள்ள போஸ்டரில் சிவா, கதாநாயகி ஐஸ்வர்யா, சதீஷ் ஆகியோர் விண்வெளியில் அமர்ந்து சீட்டு விளையாடுவது போன்று உள்ளது.

மேலும் அகில உலக சூப்பர் ஸ்டாரான சிவாவின் அறிமுக பாடல் 26ந்தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close