சுரபியின் அதிரடி முடிவு!

  திஷா   | Last Modified : 26 Jun, 2018 06:22 am

surabhi-s-next-movie

விக்ரம் பிரபுவுடன் இவன் வேற மாதிரி படத்தில் நடித்தவர் சுரபி. இதில் பப்ளியான, அப்பாவி பெண் பாத்திரத்தை ஏற்று, தனது இயல்பான நடிப்பினை வெளிபடுத்தினார். இதற்காக சில தென்னிந்திய திரைப்பட விருதுகளில் சிறந்த பெண் அறிமுக நாயகி விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டார்.

ஆனால், தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லாமலே இருந்தார். பிறகு தனுஷின் வேலையில்லா பட்டதாரி படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் பிறகு சொல்லிகொள்ளும் படி படங்கள் அமையவில்லை. தற்போது தமிழில் ஜி.வி.பிரகாஷுடன் அடங்காதே என்ற படத்தில் நடித்து வருகிறார். 

இதனை தொடர்ந்து தெலுங்கு திரையுலகம் சென்றார் சுரபி. அங்கு தற்போது, ஆதி சசிக்குமாருடன் ஒரு படத்தில் கமிட் ஆகியுள்ளார். பெயரிடப் படாத இந்தப் படத்திற்கு ஶ்ரீனிவாச நாயுடு இயக்குகிறார். சமீபத்தில் இதனை அதிகாரப் பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள் படக்குழுவினர். லவ் அண்ட் ரொமான்டிக் படமாக உருவாக இருக்கும் இதன் படப்பிடிப்பு ஜூலையிலிருந்து தொடங்குகிறதாம். இந்தப் படத்தில் கவர்ச்சி களத்தில் குதிப்பது என முடிவெடுத்திருக்கிறாராம் சுரபி. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close