பிரபல நடிகரின் இரண்டாவது மனைவிக்கு இரண்டாவது திருமணம்!

  திஷா   | Last Modified : 25 Jun, 2018 03:53 pm
pawan-kalyan-s-ex-wife-renu-desai-gets-engaged

பிரபலங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு பேரும் புகழும் அடைந்திருந்தாலும், அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் நடக்கும் சின்ன விஷயங்கள் கூட பெரும் விமர்சனத்தைப் பெறும். அப்படி தான் தெலுங்கு நடிகர் பவன் கல்யாணுக்கும் நடந்துள்ளது. 

பவன் கல்யாணின் இரண்டாவது மனைவி ரேணு தேசாய். இவர் நடிகை, இயக்குநர், தயாரிப்பாளர், ஆடை வடிவமைப்பாளர் என பல திறமைகளுக்கு சொந்தக்காரர். விஜய் ஜோதிகா நடித்த மாபெரும் வெற்றிப் படமான குஷி படத்திற்கு இவர் தான் காஸ்ட்யூம் டிஸைனர். ரேணுவுக்கும் பவனுக்கும் கடந்த 2009-ல் திருமணம் நடந்தது. குறிப்பாக பவன் கல்யாணின் இரண்டாவது மனைவி தான் ரேணு. இவர்கள் இருவருக்கும் அகிரா என்ற மகனும், ஆத்யா என்ற மகளும் உள்ளனர். மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இவர்கள் கருத்து வேறுபாடுகளால் 2012-ல் விவாகரத்துப் பெற்று பிரிந்தனர். 

அதன் பிறகு அன்னா லெஸ்னீவா என்ற ரஷ்யப் பெண்ணை மூன்றாவதாக மணந்துக் கொண்டார் பவன் கல்யாண். இந்நிலையில் தற்போது பவனின் இரண்டாவது மனைவி ரேணு தேசாய்க்கு இரண்டாவது திருமணம் நடக்கப் போகிறது. சமீபத்தில் நிச்சயதார்த்தமும் முடிந்திருக்கிறது. ஆனால் மணமகன் யார் என்பது மட்டும் ரகசியமாக வைக்கப் பட்டுள்ளது. 

வழக்கம் போல் இந்த விஷயம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close