’அம்மா’வில் மீண்டும் திலீப் - தலைவரானார் மோகன்லால்!

  Newstm Desk   | Last Modified : 25 Jun, 2018 04:50 pm
mohanlal-takes-charge-of-amma

மலையாள நடிகர் -நடிகைகளுக்காக இயங்கும் ‘அம்மா’ எனகிற சங்கத்துக்கு தலைவராக மோகன்லால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

தமிழ் நடிகர் - நடிககளுக்கென ’தென்னிந்திய நடிகர் சங்கம்’ இருப்பதைப் போல, கேரளாவில் மலையாள நடிகர், நடிககளுக்காக ‘அம்மா’ என்கிற பெயரில் சங்கம் செயல்படுகிறது. நீண்ட நெடுங்காலமாக இந்த சங்கத்தின் தலைவாராக இருந்து வந்த நடிகர் இன்னசென்ட், தனது உடல்நலம் கருதி நடிகர் சங்க தலைவர் பதவியில் இருந்து விலகிக்கொண்டார். இதையடுத்து, இந்த சங்கத்துக்கு புதிய தலைவர் மற்றும் நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்காக நடிகர் சங்க கூட்டம் கொச்சியில் நடந்தது. இதில் புதிய தலைவராக மோகன்லால் தேர்தெடுக்கப்பட்டார். மேலும்  நடிகர் முகேஷ் துணைத்தலைவராகவும், இடைவேளை பாபு பொதுச் செயலாளராகவும், நடிகர் சித்திக் துணைச் செயலாளராகவும்,  ஜெகதீஷ் பொருளாளராகவும், மற்றும் பலர் நிர்வாககுழு உறுப்பினர்களாகவும் தேர்தெடுக்கப்பட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் அனைவரும் இன்று பொறுப்பேற்றுக் கொண்டனர். 

இந்த சங்கத்தின் பொருளாளராக இருந்த நடிகர் திலீப், நடிகை பாவனா கடத்தல் வழக்கில் கைதானதால் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டிருந்தார். தற்போது அவர், மீண்டும் சங்கத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close