நடுவானில் பிரபல நடிகருக்கு நெஞ்சு வலி: அவசரமாக தரை இறக்கிய விமானி!

  Newstm Desk   | Last Modified : 26 Jun, 2018 10:33 am

chest-pain-for-a-famous-actor-who-flay-in-flight

நடுவானத்தில் விமானத்தில் பறந்து கொண்டிருந்தபோது பிரபல மலையாள நடிகர் கேப்டன் ராஜுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. நல்லவேளையாக அவர் காப்பாற்றப்பட்டார்.

கேரளாவை சேர்ந்தவர் நடிகர் கேப்டன் ராஜ். தமிழில் ’நல்ல நாள்’, ’ஜல்லிக்கட்டு’, ’கடமை கண்ணியம் கட்டுப்பாடு’, ’தர்மத்தின் தலைவன்’, ‘என் ஜீவன் பாடுது’, ’சூரசம்ஹாரம்’, ’ஜீவா’, ‘தாய்நாடு’ உள்பட பல படங்களில் வில்லன், குணச்சித்திர நடிகராக நடித்து உள்ளார். 

நடிகர் கேப்டன் ராஜு நேற்று முன்தினம் மாலை கொச்சியிலிருந்து அமெரிக்காவுக்கு விமானத்தில் சென்றார். விமானம் அமெரிக்காவுக்கு செல்லும் வழியில் கேப்டன் ராஜூவுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவசரமாக விமானம் ஓமனில் தரையிறக்கப்பட்டது. விமான நிலையத்தில் தயார் நிலையில் இருந்த ஆம்புலன்சில் ஏற்றப்பட்ட ராஜு, அங்குள்ள கிம்ஸ் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சாியான நேரத்தில், தரை இறக்கி, உயிரைக் காப்பாற்றிய விமானிக்கு நடிகர் ராஜு நன்றி தெரிவித்துள்ளார்.

67 வயதான கேப்டன் ராஜு, தன்னுடைய பட்டப்படிப்பை முடித்தவுடன் இந்திய ராணுவத்தில் சேர்ந்த பணியாற்றினார். ராணுவ கேப்டனாக அவர் இருந்துள்ளார். அதன்பிறகு, சினிமாவில் நடிக்க வந்தார். மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி என அவர் பல மொழிகளில் 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

தொடர்புடைய செய்திகள் :
Advertisement:
[X] Close