டீசரைப் பார்க்க 500 ரூபாய் கட்டணமா?

  திஷா   | Last Modified : 26 Jun, 2018 06:38 pm

pay-rs-500-to-watch-the-villain-teaser

கன்னட சினிமாவின் முன்னணி ஹீரோக்கள் சிவ ராஜ்குமார் மற்றும் கிச்சா சுதீப். தற்போது இவர்கள் இருவரும் இணைந்து நடித்திருக்கும் படம் 'த வில்லன்'. இயக்குநர் பிரேம் இயக்கியிருக்கும் இந்தப் படம் அதிக எதிர்பார்ப்பில் இருக்கிறது. இந்தப் படத்தின் இரண்டு டீசர்கள் வரும் - 28ம் தேதி வெளியாக இருக்கிறது.

சிவ ராஜ்குமார் மற்றும் சுதீப் என இரண்டு மிகப் பெரிய ஹீரோக்கள் இருப்பதால் இந்த டீசர் ரிலீஸை வைத்து ஒரு மாஸ் பிளான் போட்டிருக்கிறார்கள் படக்குழுவினர். அதாவது டீசரை 'பெய்டு' ஸ்க்ரீனிங் ஆக மாற்றி, பெங்களூர் ஜி.டி வேர்ல்ட் மாலில் வெளியிட இருக்கிறார்கள். சிவ ராஜ்குமாருக்கு ஒன்று, சுதீப்பிற்கு ஒன்று என மொத்தம் 2 டீசர்களை உருவாக்கியிருக்கிறார்கள். அவற்றைப் பார்க்க 500 ரூபாய் டிக்கெட் வாங்கிக் கொள்ள வேண்டும்.

இதன் மூலம் கிடைக்கும் நிதியை, உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ள கன்னட சினிமாவின் மூத்த இயக்குநர்களான ஏ.டி.ரகு மற்றும் ஏ.ஆர்.பாபு மேலும் சாண்டல்வுட் சார்ந்த மற்ற சினிமா கலைஞர்களின் சிகிச்சைக்கு அளிக்க இருக்கிறார்கள் 'த வில்லன்' டீம். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close