மிரட்டலான ஜெயம் ரவியின் 'அடங்க மறு' ஃபர்ஸ்ட் லுக்!

  திஷா   | Last Modified : 27 Jun, 2018 06:19 am

jayam-ravi-s-adangamaru-first-look

கடந்த வாரம் வெளியான ஜெயம் ரவியின் ‘டிக் டிக் டிக்’ படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இதனை இயக்குநர் சக்தி செளந்தர் ராஜன் இயக்கியிருந்தார். இதனைத் தொடர்ந்து அறிமுக இயக்குநர் கார்த்திக் தங்கவேலின் ‘அடங்க மறு’ படத்தில் நடித்து வருகிறார் ஜெயம் ரவி. இந்தப் படத்தை ‘ஹோம் மூவி மேக்கர்ஸ்’ நிறுவனம் தயாரித்து வருகிறது. இது ‘ஜெயம்’ ரவியின் கரியரில் 24-வது படம்.

இதில் ஹீரோயினாக ராஷி கண்ணா நடித்திருக்கிறார். இந்த அடங்கமறு படத்தில் போலீஸ் கதாப்பாத்திரத்தில் ரவி நடித்திருக்கிறார். சாம்.சி.எஸ் இசையமைக்கும் இதற்கு சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்கிறார். தற்போது இதன் ஷூட்டிங் முடிவடையும் தருவாயில் உள்ளதாம்.

இந்நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிக்கும் ரவிக்கு இந்தப் படமும் வேறு பாணியில் இருக்குமாம். அதோடு வெளியான போஸ்டர்கள் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகப் படுத்தியுள்ளன. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close