மங்காத்தா- 2வில் நடிக்கும் சிம்பு

  Newstm Desk   | Last Modified : 27 Jun, 2018 09:16 am
simbhu-s-come-back-on-the-cards

இயக்குநர் வெங்கட் பிரபு அடுத்தாதாக மங்காத்தா 2 படத்தில் சிம்புவை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

செக்க சிவந்த வானம் படத்தில் நடித்து முடித்திருக்கும் சிம்பு அடுத்ததாக கலைப்புலி தானு தாயரிக்கும் படம், விஜயா பிரோடக்ஷன்சின் படம், அவரே இயக்கும் படம் மற்றும் கவுதம் வாசுதேவனின் விண்ணைதாண்டி வருவாயா 2 பாகம் என அடுத்தடுத்து 4 படங்களை கைவசம் வைத்துள்ளார். 

இந்நிலையில் தற்போது மங்காத்தா 2 படத்தில் அவர் நடிக்க இருப்பதாக சமூகவலைதளங்களில் கூறப்படுகிறது. இயக்குநர் வெங்கட் பிரபு, சிம்பு மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆகியோர் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் பரப்பப்பட்டு வருகிறது. மேலும்  இந்த புகைப்படத்தை பகிர்ந்து ஒரு சிலர் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கு வாழ்த்து தெரிவித்தனர். அதற்கு அவர் நன்றி கூறி வருகிறார். எனவே இந்த கூட்டணி இணைய உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சிம்புவை வைத்து முன்னதாக பில்லா 3 படத்தை இயக்க வெங்கட் பிரபு முடிவு செய்திருந்ததாகவும் தற்போது  மங்காத்தா 2ம் பாகத்தில் சிம்புவை இயக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இந்த செய்தி ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ள நிலையில் அவர்களுக்கு இன்னும் மகிழ்ச்சியளிக்கும் விதத்தில் சிம்பு கார்த்திக் நரேனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படமும் வெளியாகிறது. 

இவைக்குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close