அஜித் படத்தில் மீண்டும் இணையும் விவேக்

  Newstm Desk   | Last Modified : 27 Jun, 2018 06:44 pm

vivek-in-viswasam-joins-the-shooting

அஜித் நடித்து வரும் விஸ்வாசம் படத்தில் நடிகர் விவேக் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சிறுத்தை சிவா இயக்கத்தில் 4வதாக அஜித் நடித்து வரும் படம் விஸ்வாசம். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 
இதில் நயன்தாரா அஜித்துக்கு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் யோகி பாபு, கலைராணி, ரமேஷ் திலக், ரோபோ சங்கர், தம்பி ராமைய்யா ஆகியோர் நடித்து வருகின்றனர். 

இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்து வருகிறார். தற்போது இந்த படத்தில் நடிகர் விவேக் இணைந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. கடைசியாக விவேக், கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் என்னை அறிந்தால் படத்தில் அஜித்துடன் நடித்திருந்தார். 

இந்த தகவல் வெளியாகி உள்ள நிலையில் அவர் படப்பிடிப்பு இணைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் விஸ்வாசம் கெட்டப்பில் இருக்கும் அஜித்துடன் விவேக் எடுத்துக்கொண்ட புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close