டிக் டிக் டிக் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு!

  திஷா   | Last Modified : 27 Jun, 2018 10:23 am

tik-tik-tik-making-video

இயக்குநர் விஜய்யின் ‘வனமகன்’ படத்திற்கு பிறகு ‘ஜெயம்’ ரவி நடித்தப் படம் டிக் டிக் டிக். சமீபத்தில் ரிலீஸான இந்தப் படத்தை சக்தி சவுந்தர் ராஜன் இயக்கியிருந்தார். தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்லாமல் இந்திய சினிமாவுக்கே பரிட்சயமில்லாத விண்வெளியை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியிருந்தது. இதில் ஹீரோயினாக நிவேதா பெத்துராஜ் நடித்திருந்தார்.

மிரட்டலான வில்லன் வேடத்தில் ஆரோன் அஜீஸ் நடித்திருந்தார். மேலும், ‘ஜெயம்’ ரவியின் மகன் ஆரவ்வுமலிதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியிருக்கிறார். டி.இமான் இசையமைத்திருந்த இதற்கு எஸ்.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்திருந்தார், பிரதீப்.E.ராகவ் படத்தொகுப்பாளராக பணியாற்றியிருந்தார். ‘ஜபக்’ஸ் மூவீஸ்’ நிறுவனம் சார்பில் வி.ஹித்தேஷ் ஜபக் மிக பிரம்மாண்டமாக தயாரித்திருந்தார்.

கடந்த வாரம் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. எப்போதும் போல் இல்லாமல் புதுமையான களத்தை கையாண்டிருப்பதும் ரசிகர்களின் வரவேற்புக்கு முக்கியக் காரணம். இந்நிலையில் தற்போது டிக் டிக் டிக் படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்கள் படக்குழுவினர். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close