துருவ நட்சத்திரம் படத்தின் சிங்கிள் ட்ராக் விரைவில்!

  திஷா   | Last Modified : 27 Jun, 2018 09:16 pm

first-single-from-dhruva-natchathiram-releasing-soon

இந்த காலத்துக்கு ஏற்றபடி காதல் மற்றும் போலீஸ் படங்களை ஸ்டைலிஷாக இயக்குபவர் இயக்குநர் கெளதம் மேனன். தற்போது தனுஷுடன் 'எனை நோக்கி பாயும் தோட்டா', விக்ரமுடன் 'துருவ நட்சத்திரம்' ஆகியப் படங்களில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். இதில் துருவ நட்சத்திரம் படத்தில் விக்ரமுடன், ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், ராதிகா, சிம்ரன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். 

ஸ்பை - த்ரில்லர் படமான இது முதலில் சூர்யாவை வைத்து ஆரம்பிக்கப் பட்டது. பிறகு இயக்குநருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் நின்று போனது. பிறகு விக்ரமை வைத்து இயக்குகிறார் கெளதம் மேனன். படத்திற்கு இசை ஹாரிஸ் ஜெயராஜ். கெளதம் மேனனின் மிக முக்கியமான அடையாளமான ஸ்டைலிஷ், விக்ரமின் லுக்கில் நன்றாக தெரிகிறது. இதன் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் ஏற்கனவே வெளிவந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. 

இந்நிலையில் இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள 'ஒரு மனம்' எனத் தொடங்கும் பாடலை கூடிய விரைவில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள் படக் குழுவினர். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close