திலீப்பை வரவேற்கும் நடிகர் சங்கம்: கோபத்தில் நடிகைகள் ராஜினமா!

  Newstm Desk   | Last Modified : 27 Jun, 2018 07:21 pm
top-malayalam-actresses-resign-from-amma-after-dileep-s-reinstatement

நடிகையை கடத்தி, பாலியல் ரீதியாக துன்புறுத்த ஏற்பாடு செய்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட மலையாள நடிகர் திலீப்பை மீண்டும் நடிகர் சங்கத்தில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நடிகர் சங்கத்தில் இருந்து 4 பிரபல நடிகைகள் ராஜினமா செய்துள்ளனர். 

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பிரபல மலையாள நடிகை கடத்தப்பட்டு, பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டார். அவரை கடத்தியவர் நட்சத்திர நடிகர் திலீப்புக்கு நெருக்கமானவர் என்றும், திலீப்புக்கும் இந்த சம்பவவத்திற்கும் தொடர்பு உண்டு, என கேரள போலீசார் கண்டுபிடித்தனர். இதைத் தொடர்ந்து திலீப் கைது செய்யப்பட்டார். அப்போது அவரை, AMMA என அழைக்கப்படும் கேரளா நடிகர் சங்கத்தில் இருந்து நீக்க நிர்வாகிகள் முடிவு எடுத்தனர். 

ஓராண்டுக்கு மேல் கழிந்த நிலையில், திலீப்பை மீண்டும் நடிகர் சங்கத்தில் சேர்க்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய அம்மா நிர்வாகிகள், திலீப்பை சங்கத்தில் இருந்து விலக்கியதில் சரியான நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்ற காரணத்தால், அவரை மீண்டும் சங்கத்தில் சேர்த்து, முறையாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்போம், என தெரிவித்துள்ளனர்.

இதற்கு மலையாள நடிகைகள் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள WCC என்ற அமைப்பு தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இந்த அமைப்பை நிறுவியது, திலீப்பின் முதல் மனைவி மஞ்சு வாரியார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், அந்த அமைப்பில் உள்ள பிரபல நடிகைகள் ரம்யா நம்பீசன், ரீமா கல்லிங்கல், இயக்குனர் கீத்து மோகன்தாஸ், மற்றும் பாதிக்கப்பட்ட நடிகை ஆகியோர், நடிகர் சங்கத்தில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்து பாதிக்கப்பட்ட நடிகை பேசியபோது, "இந்த சம்பவத்துக்கு முன், பலமுறை எனக்கு வர வேண்டிய சினிமா வாய்ப்புகளை இந்த நடிகர் பறித்துள்ளார். அப்போது நான் பலமுறை புகார் அளித்தும் சங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது இவ்வளவு பெரிய விஷயமாக உருவெடுத்த பின்னும், அவரை பாதுகாக்க இந்த சங்கம் முயற்சி செய்கிறது. இனிமேலும் இங்கு இருப்பதில் அர்த்தம் இல்லை" என தெரிவித்துள்ளார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close