சிம்புவுடன் தான் அடுத்த படம், ஆனால் மங்காத்தா-2 இல்ல: வெங்கட் பிரபு

  Newstm Desk   | Last Modified : 29 Jun, 2018 05:26 am

venkat-prabhu-confirms-his-next-movie-with-simbhu

தனது அடுத்த படத்தில் சிம்புவை இயக்க உள்ளதாகவும் ஆனால் அது மங்காத்தா 2ம் பாகம் இல்லை என்றும் இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளது. 

இரு தினங்களுக்கு முன்பு சிம்பு வெங்கட் பிரபுவுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியானது. உடனே மங்காத்தா 2 படத்தை வெங்கட் பிரபு இயக்குவதாகவும் அதில் சிம்பு நடிக்க இருப்பதாகவும் பலர் தெரிவித்தனர். 

இந்நிலையில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார் வெங்கட் பிரபு. அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "எனது அடுத்த படம் சிம்பு உடன் தான். இதனை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். இது புது ஸ்கிரிப்ட். எந்த படத்தின் இரண்டாம் பாகமும் அல்ல. படத்தில் வேலைசெய்யும் மற்ற கலைஞர்கள் பற்றி விரைவில் அறிவிக்ப்படும்"என பதிவிட்டுள்ளார். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close