புது வரவு : சசிகுமார் - அதர்வா படங்கள் மோதல்!

  பால பாரதி   | Last Modified : 28 Jun, 2018 01:13 pm

new-movie-arrivals

இந்த வாரம் புதுவரவாக 4 படங்கள் களம் இறங்குகின்றன. அதில் சசிகுமாரின் ’அசுரவதம்’, அதர்வாவின் ’செம போத ஆகாத’ படங்களுக்கிடையே நேரடி மோதல் உள்ளது.

அசுரவதம்: சசிகுமாருக்கு எப்போதுமே கை கொடுக்கும் கிராமியப் பின்னணியைக் கொண்ட கதை. நல்லவனுக்கும், கெட்டவனுக்கும் நடுவே நடக்கும் போராட்டத்தைப் பற்றி இந்தப் படம் பேசுகிறது! நாயகனுக்கும், நாயகிக்கும் டூயட் எதுவும் கிடையாதாம்! படம் முழுக்க எமோஷன் மற்றும் சென்டிமென்ட் தானாம்!   

இதில் சசிகுமார் ஜோடியாக நந்திதா ஸ்வேதா நடித்திருக்கிறார். அறிமுக இயக்குநர் மருது பாண்டியன் இயக்கியிருக்கும் இந்தப் படத்தை ‘செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ’ நிறுவனம் சார்பில் லீனா லலித்குமார் தயாரித்துள்ளார். படத்துக்கு கோவிந்த் வசந்த் இசையமைத்திருக்கிறார். ’அசுரவதம்’ படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்தப் படம், நாளை (ஜூன் 29) ரிலீஸ் ஆகிறது.  

செம போத ஆகாத: இளம் நாயகன் அதர்வா நடிப்பில் தயாராகியிருக்கும் படம் 'செம போத ஆகாதே'. இந்தப் படத்தில் அதர்வாவுக்கு மிஷ்டி மற்றும் அனைகா சோதி என இரண்டு ஜோடிகள். மேலும் அர்ஜய், ஜான்  விஜய், கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, பிரின்ஸ் நிதிக் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். 

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்தப் படத்துக்கு கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பத்ரி வெங்கடேஷ் இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தை கிக்கஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்திருக்கிறது. ஸ்ரீ தேனாண்டாள் ஸ்டூடியோ லிமிடெட் இந்தப் படத்தை வெளியிடுகிறது. 'பாணா காத்தாடி' படத்திற்கு பிறகு இயக்குநர் பத்ரி வெங்கடேஷ், நாயகன் அதர்வா மீண்டும் இணைந்திருக்கும் இந்த படத்தில் வரும்’அயிட்டம் காரன்’ என்கிற துள்ளலான பாடல் ரசிகர்களின் ரிங் டோனாக மாறியிருக்கிறது. 

இட்லி : சரத்குமார் நடிப்பில் வந்த ’வைத்தீஸ்வரன்’ படத்தை இயக்கிய வித்யாதரனின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’இட்லி’. இப்படத்தில் சரண்யா பொன்வண்ணன், கோவை சரளா, மறைந்த நடிகை கல்பனா மற்றும் மனோபாலா, ’லொள்ளு சபா’ சாமிநாதன், இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு தரன் இசையமைக்க, கண்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அப்பு மூவீஸ் சார்பில் பாபு தூயயவன் மற்றும் ஜி.கார்த்திக் இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படம் வங்கியை கொள்ளையடிக்கும் மூன்று வயதான பெண்களை சுற்றி நடக்கும் காமெடிப் படமாக உருவாகியுள்ளது. 

இந்தப் படங்களை தவிர புதுமுகங்கள் நடித்திருக்கும் ’எதுக்குடி காதலிச்ச’ என்கிற படமும் நாளை ரிலீஸ் ஆகிறது. 
 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close