சிம்ஹாவுடன் இணையும் மணிரத்னம் - ஷங்கர் நாயகி!

  திஷா   | Last Modified : 29 Jun, 2018 05:28 am

madhoo-on-board-for-bobby-simha-s-agni-dev

‘சென்னையில் ஒரு நாள் 2’ படத்தை இயக்கிய ஜே.பி.ஆருடன் இணைந்து ஷாம் சூர்யா இயக்கவுள்ள புதிய படம் ‘அக்னி தேவ்’. இது பிரபல க்ரைம் கதை எழுத்தாளர் ராஜேஷ் குமார் எழுதிய ஒரு நாவலின் தழுவலாம். இதில் ஹீரோவாக பாபி சிம்ஹா நடிக்கவிருக்கிறார்.

டைட்டில் ரோலில் நடிக்கும் சிம்ஹாவுடன் முக்கிய ரோலில் காமெடி நடிகர் சதீஷ் நடிக்கிறார். தற்போது, இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ‘ரோஜா, ஜென்டில் மேன்’ என தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரகள் மணிரத்னம் மற்றும் ஷங்கர் படங்களில் நடித்த நடிகை மதுபாலா கமிட்டாகியிருக்கிறார்.  இதனை படக்குழுவினரே அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளனர். சேன்டோஸ் ஸ்டுடியோ – ஜெய் ஃபிலிம் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனங்கள் இணைந்து இந்த அக்னி தேவ் படத்தை தயாரிக்கிறார்கள். 

சமீபத்தில், படத்திற்கான பூஜை போடப்பட்டது. சமீபத்தில் இந்தப் படத்திற்கான பூஜை போடப் பட்டுள்ளது. படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் டெக்னீஷியன்கள் குறித்த விபரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்ப் பார்க்கப் படுகிறது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close