நடிகர் சங்கத்தில் மீண்டும் சேர மாட்டேன்: திலீப்

  Newstm Desk   | Last Modified : 29 Jun, 2018 08:26 am
wont-return-to-film-body-dileep

தன் மீது எந்த தவறும் இல்லை என்பதை நிரூபிக்கும் வரை நடிகர் சங்கத்தில் மீண்டும் சேர மாட்டேன் என நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான திலீப் தெரிவித்தார். 

நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கிய திலீப் மீண்டும் மலையாள நடிகர் சங்க உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகைகள் பாவனா, ரம்யா நம்பீசன், ரீமா கல்லிங்கல், கீது மோகன்தாஸ் ஆகியோர் சங்கத்தில் இருந்து ராஜினாமா செய்தனர்.   மேலும் பிரபல நடிகைகள் ரேவதி, பத்மபிரியா, பார்வதி ஆகியோர் நடிகர் சங்க செயலாளர்  இடைவேளை பாபுவிற்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளனர். அதில், ‘வழக்கு நிலுவையில் உள்ளபோது திலீப்பை எப்படி சங்கத்தில் சேர்க்கலாம்? அவசர பொதுக்குழு கூட்டி இது குறித்து விவாதிக்கவேண்டும்’ என்றனர்.

இதற்கிடையே நடிகர் சங்க நிர்வாகிகளுக்கு திலீப் கடிதம் எழுதியுள்ளார். அதில், "நடிகர் சங்கத்தில் மீண்டும் என்னை சேர்க்க முடிவு செய்துள்ளதாக நான் அறிந்தேன். என்னிடம் விளக்கம் கேட்காமல் என்னை வெளியேற்றிய  தீர்மானத்தை நடிகர் சங்க நிர்வாகிகள் ரத்து செய்துள்ளதை அறிந்து  மகிழ்ந்தேன். ஆனால் எந்த தவறும் செய்யாமல் நான் வழக்கில் சிக்கிக் கொண்டேன். இந்த வழக்கிலிருந்து, நான் நிரபராதி என்பதை நிரூபித்து விடுதலையாகும் வரை நடிகர் சங்கத்தில் சேர விரும்பவில்லை. என்னை மீண்டும் சங்கத்தில் சேர்க்க முடிவு செய்ததால் நடிகர் சங்கத்தை சிலர் அவமானப்படுத்துவது கவலையளிக்கிறது" என்றார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close