இரண்டே நிமிடத்தில் லவ்லி கெட்டப் மாறிய மாதவன்... வைரலாகும் படம்!

  திஷா   | Last Modified : 30 Jun, 2018 06:02 am

maddy-s-new-look-for-maara

சமீபத்தில் கவனம் ஈர்த்த 'கல்கி’ என்ற குறும்பட இயக்குநர் திலீப் குமார் இயக்கவிருக்கும் திரைப்படம் ‘மாறா’. இதில் ஹீரோவாக மாதவன் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக விக்ரம் வேதாவில் நடித்த ஷ்ரதா ஸ்ரீநாத் நடிக்கவுள்ளார்.

இந்தப் படத்திற்கு பகவான் ஒளிப்பதிவு செய்ய, நவீன் வசனம் எழுதுகிறார். சமீபத்தில், இந்தப் படத்திற்கான லுக் டெஸ்ட் நடந்தது. அப்போது தான் எடுத்த செல்ஃபியை மாதவன் தனது இன்ஸ்டாவில் பகிர, ரசிகர்களிடம் இருந்து லைக்ஸ் குவிந்த வண்ணம் உள்ளது. 

சமீபமாக இறுதி சுற்று, விக்ரம் வேதா என ஆக்‌ஷன் படங்களில் நடித்து வந்த மாதவன், திரும்பவும் ரொமான்டிக் ரூட்டில் பயணிக்கிறார். ஆம், ரொமான்டிக் ஜானரில் உருவாகவிருக்கும் இந்த மாறா படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கவுள்ளார். படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்களை விரைவில் அறிவித்து விட்டு, ஷூட்டிங்கை தொடங்க பிளான் செய்திருக்கிறார்கள் படக்குழுவினர். 

மாதவன் தற்போது சவ்யாச்சி என்ற தெலுங்கு படத்திலும், ஷாருக் கான் நடிக்கும் ஜீரோ படத்தில் சிறப்புத் தோற்றத்திலும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close