ஒரு பாட்டே தாங்கல, இப்போ எல்லா பாட்டும் ரிலீஸ் - தமிழ் படம் 2

  திஷா   | Last Modified : 30 Jun, 2018 12:14 am

tamil-padam-2-songs-out

மற்ற நடிகர்களின் படங்கள், கெட்டப்புகள், சமூக பிரச்னைகள் ஏன் ட்ரம்பைக் கூட விட்டு வைக்கவில்லை தமிழ் படம் - 2 குழுவினர். அநேகமாக அதிக போஸ்டர்களை ரிலீஸ் செய்த படம் இதுவாகத்தான் இருக்கும். 

2010 - ல் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா நடித்து வெளியானப் படம் தமிழ் படம். படங்களைக் கலாய்க்கும் யுக்தியை வைத்தே அந்தப் படம் ஹிட் ஆனது. தவிர படத்தின் பாடல்களும் சூப்பர் ஹிட். 

8 வருடங்களுக்குப் பிறகு இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியிருக்கிறது. சிவாவுடன் முதல் பாகத்தில் நடித்த நடித்த திஷா பாண்டேவும் இதில் நடித்திருக்கிறார். தவிர ஐஸ்வர்யா மேனன், சதீஷ், சந்தான பாரதி, மனோபாலா, ஆர்.சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி, சேத்தன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.  குறிப்பாக இதில் முதன் முறையாக சதீஷ் வில்லன் ரோலில் நடித்திருக்கிறாராம். 

விக்ரம் வேதாவை தயாரித்த ‘Y NOT ஸ்டுடியோஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை ‘டிரிடென்ட் ஆர்ட்ஸ்’ நிறுவனம் வெளியிடுகிறது. படத்தின் டீசர் மற்றும் சிங்கிள் ட்ராக் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில், தற்போது தமிழ் படம் 2 - வின் பாடல்களும் ரிலீஸ் ஆகியிருக்கின்றன. எந்த எந்த பாடலில் யார் யாரை கலாய்த்திருக்கிறார்கள் என்று இப்போது பட்டியல் தயாரிக்கொண்டிருக்கிறது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close