தம்பி ராமையாவின் ’மணியார் குடும்பம்’ பட ஆடியோ ரிலீஸ்!

  பால பாரதி   | Last Modified : 01 Jul, 2018 03:29 pm

maniyar-kudumbam-audio-launch

நடிகர் தம்பி ராமையா இயக்கத்தில் உருவாகியிருக்கும் ’மணியார் குடும்பம்’ படத்தின் இசை மற்றும் பாடல்களை கே.பாக்யராஜ் வெளியிட்டார்.  

மறைந்த நடிகர் முரளி நடிப்பில் வந்த 'மனுநீதி' , வடிவேலு நடித்த ’இந்திரலோகத்தில் நா,அழகப்பன்’ போன்ற படங்களை இயக்கிய தம்பி ராமையா, பிறகு நடிகராக அவதாரம் எடுத்தார். காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் ஏற்று நடித்து வரும் அவருக்கு, `மைனா' படத்துக்காக சிறந்த குணசித்திர நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது.
படம் இயக்குவதற்கு கொஞ்சம் இடைவெளி விட்டிருந்த தம்பி ராமையா தற்போது, தனது மகன் உமாபதியை ஹீரோவாக வைத்து 'மணியார் குடும்பம்' என்ற படத்தை இயக்கியுள்ளார். அத்துடன் இந்தப் படத்துக்கு தம்பி ராமையாவே இசையமைக்கவும் செய்கிறார். 

இதில் உமாபதிக்கு ஜோடிகளாக மிருதுளா முரளி, 'பிக்பாஸ்' யாஷிகா ஆகியோர் நடித்துள்ளனர். சமுத்திரக்கனி முக்கிய வேடம் ஏற்று நடிக்கிறார். காதல், ஆக்‌ஷன், சென்டிமென்ட், காமெடி என கமர்ஷியல் கலவையில் உருவாகி வரும் இந்தப் படத்துக்கு பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்கிறார். 

இந்நிலையில், ’மணியார் குடும்பம்’ படத்தின் இசை மற்றும் பாடல்களை இயக்குநரும், நடிகருமான கே.பாக்யராஜ் வெளியிட, படக்குழுவினர் பெற்றுக் கொண்டனர். இந்த விழாவில் இயக்குநர்கள் பிரபு சாலமன், விக்ரமன், சேரன், சிவா, ஏ.வெங்கடேஷ், நடிகர்கள் சூரி, ஆர்.கே.சுரேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.  

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close