’களவாணி 2’ ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

  Bala   | Last Modified : 30 Jun, 2018 07:21 pm

actor-madhavan-to-launch-the-first-look-of-kalavaani-2

விமல், ஓவியா நடிப்பில் உருவாகி வரும் ’களவாணி 2’ ஃபர்ஸ்ட் லுக்கை  நடிகர் மாதவன் சற்று நேரத்துக்கு முன் வெளிட்டார்.

இயக்குநர் சற்குணத்தின் முதல் படமான ’களவாணி’யில் விமல் - ஓவியா ஜோடியாக நடித்திருந்தனர். நடிகை ஓவியாவை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய இந்தப் படத்தில் காமெடி நடிகர்கள் சூரியும், கஞ்சா கருப்புவும் நடித்திருந்தனர்.      

’களவாணி’ படம் ஹிட் ஆந்தைத் தொடர்ந்து தற்போது ’களவாணி 2’ படமும் தயாராகி வருகிறது. இதிலும் விமல் ஓவியா ஜோடி சேர்ந்துள்ளனர். சற்குணம் தான் படத்தை இயக்குகிறார்.
இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் மாதவன், இன்று மாலை வெளியிடுகிறார் என படக்குழுவினர் அறிவித்திருந்தனர். அதன்படி, சற்று நேரத்துக்கு முன் ’களவாணி 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை  நடிகர் மாதவன் வெளிட்டார். ’களவாணி 2’ படத்தின் பாடலகள் விரைவில் வெளிவர உள்ளது.
 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close