அடுத்த படத்துக்கு தயாராகும் அருள் நிதி!

  பால பாரதி   | Last Modified : 01 Jul, 2018 09:01 pm

arul-nithi-s-next-movie

நடிகர் அருள்நிதி தனது அடுத்த படத்துக்கு ஆயத்தமாகிவிட்டார்.

பாண்டிராஜ் இயக்கத்தில் வந்த ’வம்சம்’ படத்தில் அறிமுகமான அருள்நிதி, தொடர்ந்து ’டிமாண்டி காலனி’, ’பிருந்தாவனம்’, ’மெளன குரு, ’இரவுக்கு ஆயிரம் கண்கள்’’ போன்ற படங்களில் நடித்தார். இதில் ’டிமாண்டி காலணி’, ‘மெளன குரு’ படங்கள் ரசிகர்களிடம் அவரை நெருக்கமாக கொண்டு போனது! சமீபத்தில் வந்த ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படம் ஐம்பது நாட்களை கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது! 

’இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு அருள்நிதிக்கு, திரையுலகத்தில் வரவேற்பு இன்னும் அதிகமாகியுள்ளது! அறிமுக இயக்குநர் பரத் நீலகண்டன் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் அருள்நிதி. எஸ்.பி. சினிமாஸ் தயாரிக்கும்  இந்த படத்துக்கு 'புரொடக்‌ஷன் நம்பர் 2' என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளனர். 

இந்தப் படத்துக்கு தர்புகா சிவா இசையமைக்கிறார். தனுஷின் ’என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்திற்கு இசையமத்து வரும் தர்புகா சிவா, அந்தப் படத்தில் இடம் பெறும் ’மறுவார்த்தை..’, ’விசிறி.., மற்றும் நான் பிழைப்பேனா..’ போன்ற சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் பதிவாகியிருக்கிறார்!
 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close